ஏட்டுத் திக்குகளிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 16, 2020

ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:



  • ஒரு குறிப்பிட்ட மதத்தினரைப் பற்றி தவறான தகவலை தருவதால், யு.பி.எஸ்.சி. ஜிகாத் என்ற தொலைக்காட்சித் தொடரை தடை செய்வதாக உச்சநீதிமன்றம் அறிவித்தது.

  • டில்லியில் நடந்த மத வன்முறை தொடர்பாக ஜே.என்.யு. முன்னாள் மாணவர் உமர் காலித் கைது மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் மீது வழக்கு என்று மத்திய அரசு, சட்ட விரோத தடுப்புச் சட்டத்தை தவறாக பயன்படுத்துகிறது என தலையங் கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • விமான நிலையங்களை தனியார்வசம் ஒப்படைக்க வழி வகுக்கும் மசோதாவை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.

  • கிராம மற்றும் நகர்புற அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு முது நிலைப்படிப்பில் இட ஒதுக்கீடு அளித்திட வேண்டும் என மருத்துவர்கள் சங்கம் தெலுங்கானா அரசிடம் கோரியுள்ளது.

  • மத்திய பிரதேச மாநிலத்தில், இதழியல் முதுநிலை படிப்புக்கான தேர்வில், 2014, 2019களில் நடைபெற்ற தேர்தலில் நரேந்திர மோடி அரசு வெற்றி பெற்றது, சாமான்ய மக்கள் அவர் தலைமைக்கு தந்த அங்கீகாரமா? என்றும், காங்கிரஸ் கட்சி இரு தேர்தலிலும் தோற்றதற்கு மூன்று முதன்மையான காரணங் கள் எவை? தற்போதைய சூழலில், ஒரு கட்சி ஆட்சி நாட்டில் கொண்டு வர சாத்தியம் உள்ளதா? போன்ற கேள்விகள் கேட் கப்பட்டது, சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.


டெக்கான் ஹெரால்டு:



  • 'இந்திய கலாச்சாரத்தின் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சி பற்றிய முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்படும் என மத்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் அறிவிப்பிற்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதற்காக அமைக்கப்பட்ட கே.என். தீட்சித் தலைமையிலான 16 பேர் கொண்ட குழுவில், உயர்ஜாதியி னரே நியமிக்கப்பட்டுள்ளனர். குழுவில் வட கிழக்கு, தலித், சிறு பான்மையினர் மற்றும் இதர பிரிவினர் ஏன் நியமிக்கப்படவில்லை என்றும் கனிமொழி கேள்வி எழுப்பி யுள்ளார்.


நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:



  • நாடாளுமன்றத்தில் கேள்விகள் நேரம் கிடையாது; புலம்பெயர் தொழிலாளர்கள் இறந்தவர்கள் எத்தனைபேர் என்ற தகவல் கிடையாது என தற்போது மோடியின் ஆட்சியில், தனித்தன்மையோடு நாடாளுமன்ற ஜனநாயகம் விளங்குகிறது என காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் சாடியுள்ளார்.


- குடந்தை கருணா


16.9.2020


No comments:

Post a Comment