தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 20, 2020

தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம்

சென்னை,செப்.20, தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வந்ததற்கு இடையே ஏற்கெனவே 2 முறை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலிமூலம் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில், கரோனா நிவாரணம், நீட் தேர்வு குறித்து விவாதிக்கப்பட்டன. தற்போது, 3ஆவது முறையாக சென்னை அண்ணா அறிவாலயத்திலேயே நாளை (திங்கட்கிழமை) அனைத்து கட்சிக் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற இருக்கிறது. இது தொடர்பாக, தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 21ஆம் தேதி (நாளை) திங்கட்கிழமை காலை 10.30 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும். கூட்டத்தில், விவசாயி களுக்கு விரோதமாக நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள 3 சட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment