எங்கள் வீட்டின் கதவுகளில்
கொரோனாவுக்காக
புதுத்தகரம் அடித்து
அடைத்துக் கொண்டிருக்கிறார்கள்!
ஓடுகள் உடைந்துள்ள
எங்கள் வீட்டின்
மேற்கூரை வழியே
நாங்கள்
தப்பக்கூடுமென்று,
யாரேனும்
இவர்களிடம் சொல்லுங்கள்!
அங்கும் தகரமடைக்கட்டும்!
வரும் மழைக்காவது
ஒழுகாமலிருக்கும்...
- வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்
No comments:
Post a Comment