கரோனா பரவல் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க குழுவை அமைத்தது உலக சுகாதார அமைப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 4, 2020

கரோனா பரவல் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க குழுவை அமைத்தது உலக சுகாதார அமைப்பு

ஜெனீவா,செப்.4, உலக சுகாதார அமைப்பால் நியமிக்கப்பட்ட சுயாதீன குழு, அடுத்த ஆண்டு சுகாதார நிறுவனம் மற்றும் கரோனா வைரஸ் வெடிப்புக்கான உலகளாவிய பதிலை மறுஆய்வு செய்து ஒரு  அறிக்கையை முன்வைக்கும் என்று கூறப்பட்டு உள்ளது. முன்னாள் லைபீரிய அதிபர் எலன் ஜான்சன் சிர்லீஃப், முன்னாள் நியூசிலாந்து முன்னாள் பிரதமர் ஹெலன் கிளார்க். தோடு இணைந்து குழுவின் தலைவ ராக இருப்பார்.


எலன் ஜான்சன் சிர்லீஃப், கூறும் போது, "இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறியப் பட்ட 2.56 கோடிக்கும் அதிகமான மக்களையும், கரோனாவால்  இறந்த 850,000 பேரையும் நாம் மதிக்க வேண்டும். இந்த குழு செப்டம்பர் 17 மற்றும் ஒவ்வொரு ஆறு வாரங்களுக்கும் ஒரு முறை ஏப்ரல் வரை சந்திப்பு நடத்தும். இது நவம்பர் மாதம் உலக சுகாதாராமிப்புக்கு  சுருக்க மாகவும் அடுத்த ஆண்டு இறுதி அறிக்கையை சமர்ப்பிக்கவும் நம்புகிறது” என கூறினார்.


No comments:

Post a Comment