சென்னை, செப். 9- சென்னை பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தராக கவுரி சமீபத்தில் நியமிக்கப்பட்டார். அவருக்கு பல்கலைக்கழக பணியாளர்கள் பாராட்டு விழா நடத்தினர். நிகழ்ச்சி யின் முடிவில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கும் விவகாரத்தில் அரசின் முடிவே இறுதியானது. பல்கலைக்கழக மானியக்குழு உள்பட இதர அமைப்புகளிடம் இருந்து அரியர் தேர்வு தொடர்பாக எந்த அறிவிப்பும் பல்கலைக்கழகத்துக்கு வரவில்லை. பருவத்
தேர்வு எழுத கட்டணம் செலுத்தி இருந்த அரியர் மாணவர்கள் அனைவருக்கும் அரசின் வழிகாட்டுதலின்படி தேர்ச்சி வழங்கப்படும்.
பல்கலைக்கழகம் மற்றும் உறுப்பு கல்லூரி இறுதி பருவத் தேர்வு மாணவர்களுக்கு இணையவழியில் நடத்தப்படும். சென்னை பல்கலைக்கழக மாணவர்களுக்கு பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஓய்வுபெற்ற பேராசிரியர்களுக்கான பணப்பலன்கள் உள்ளிட்ட பல்கலைக்கழகத்தில் நிலவும் குறைகள் விரைவில் சரி செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அரசுக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
சென்னை, செப். 9- கல்லூரிக் கல்வி இயக்குநர் சி.பூரணசந்திரன், அனைத்து அரசு கலைக் கல்லூரி முதல்வர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,
“தற்போது விண்ணப்பித்துள்ள பாடப்பிரிவுகளில் இடம் கிடைக் காத மாணவர்களது விண்ணப்பத்தை, தகுதியுள்ள பிற பாடப்பரிவு களில் விதிமுறைகளைப் பின்பற்றி சேர்க்கை வழங்கலாம். சுழற்சி 1இல் இடம் கிடைக்காதவர்களுக்கு, சுழற்சி 2இல் இடம் அளிக்கலாம். இருக்கும் இடங்களைக் காட்டிலும் குறைவாக விண்ணப்பம் பெற்ற கல்லூரிகளில், மாற்று நடவடிக்கைகளைப் பின்பற்றி மீதமுள்ள இடங்களை நிரப்ப முதல்வர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர் சேர்க்கைக் குழுவினர் எவ்விதப் புகாருக்கும் இடமளிக்காத வகையில், முதல்வரின் வழிகாட்டுதலுடன் சேர்க்கை நடத்தி முடிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
மின்சார வாகன விற்பனை விரிவாக்கம்
சென்னை, செப், 9- இந்தியாவின் முதன்மை ஸ்மார்ட் மின்சார இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஏத்தர் எனர்ஜி, 125 சிசி பிரிவில் விரைவான ஸ்கூட்டர்களில் ஒன்றான தங்களது முதன்மை ஸ்கூட்டர் ஏத்தர் 450X-இன் விற்பனை துவக்க காலத்தை அறிவித்தது, இது நவம்பர் 2020 முதல் தொடங்கவுள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டபடி, 2021-இன்முதல் காலாண்டுக்கு முன் ஏத்தர் 450 X 10 நகரங்களிலும், அதாவது பெங்களூரு, சென்னை, அய்தராபாத், மும்பை, புனே, டில்லி, அகமதாபாத், கொச்சி, கொல்கத்தா மற்றும் கோவை ஆகிய நகரங்களில் உள்ள சாலைகளில் காணப்படும் என்பதை ஏத்தர் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. முதலில் பெங்களூரு மற்றும் சென்னை நகரங்களில் டெலிவரிகள் தொடங்கி பின்னர் மீதமுள்ள நகரங்களில் ஒவ்வொரு கட்டமாகத் தொடங்கும் என இந்நிறுவன தலைமை நிர்வாகி தருண் மேத்தா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment