செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 9, 2020

செய்தியும், சிந்தனையும்....!

ஊழலோ ஊழல்!


விவசாயிகளுக்கான நிதியுதவி திட்டத்தில் ரூ.110 கோடி முறைகேடு அம்பலம்.  37 அதிகாரிகள் இடைநீக்கம் - 80 அலுவலர்கள் பணிநீக்கம்.


விவசாயிகளுக்கு தவணை ஒன்றுக்கு ரூ.2000 வீதம் மூன்று தவணைகளில் ரூ.6000 அளிக்கும் பிரதமரின் கிசான் திட்டத்தை மத்திய அரசு அறிவித்திருந்தது. இதில்தான் இந்த முறைகேடு நடந்திருக்கிறது. அரசுத் துறையினரும் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர்.


கடவுள் எங்கும் இருக்கிறார் என்பது பொய் - ஊழல் எங்கும் நிறைந்திருக்கிறது என்பதே மெய். வாக்குக்குப் பணம் கொடுப்பது - பணம் வாங்கிக் கொண்டு வாக்களிப்பது என்பதிலிருந்தே ஊழல் தொடங்கிவிட்டதே. இந்த மனநிலை உள்ளவரை ஊழல் ஒய்யாரமாகத்தான் நடைபோடும்.


No comments:

Post a Comment