‘‘உண்மையாகவே கடவு ளிடத்திலும், மதத்தினிடத்தும் நம்பிக்கையும், பற்றுதலும் இருக்குமானால், முதலில் அப் பொருள்களைப் பற்றிய உண் மைக் கருத்துகளையும், அவை எவ்வகையில் மக் களின் வாழ்க்கைக்கு உதவி செய்தன - செய்கின்றன என் பதையும் அறிவோடு ஆராய்ந்து பார்க்க வேண் டாமா? மக்களின் வாழ்க்கைத் துறையிலுள்ள எந்தக் காரியம், எந்த முறையில், எந்தக் காலத்தில் இச்சொல்லப்பட்ட கடவுள் - மதம் ஆகியவற்றின் உதவியைக் கொண்டு நடை பெற்றது என்பதை ஆதாரத் தோடு விளக்கவேண்டாமா?
கடவுள் - மதம் ஆகியவற் றுக்கும், மக்களின் வாழ்க்கைத் துறைக்கும் ஏற்படுகின்ற சம் பந்தம் எவ்வாறு எந்த முறை யில் நிகழ்கின்றன என்பதை யாவது எடுத்துக்காட்ட வேண்டாமா?
***
கடவுளின் கடாட்சமும், மதத்தின் மகிமையும், மங்கிப் போன ஏடுகளில் உள்ள எழுத் துகளில் காணப்படுகின்ற னவே யொழிய, நடைமுறை யில் யாதாயினும் ஒரு நன்மை கடவுள் - மதம் ஆகியவற்றால் மக்களின் வாழ்க்கைக்கு ஏற் படுகின்றதா என்பதையாவது இவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டாமா?
***
கடவுட் கொள்கையும், மதக் கோட்பாடும் உயிர் களைத் தண்டிப்பதும், அனுக் கிரகிப்பதும் ஒரு கடவுளின் செயலாக இருக்குமானால், அதற்குக் கடவுளிலக்கணம் கூறுகின்றபடி கடவுள் என்ற பெயர் பொருந்துமா என்பதை யாவது யோசித்துப் பார்க்க வேண்டாமா?
***
கடவுளைக் கண்டவர் களாகச் சொல்லப்படும் சம யாசிரியர்கள் எல்லாரும் மக் களினத்தைச் சேர்ந்தவர்கள் தானே! அவர்கள் கண்களுக் குப் புலப்பட்டக் கடவுள் அவர்கள் போலும் மக்களா கிய ஏனையோர்க்குப் புலப் படாமல் இருப்பானேன்? கடவுளை நேரில் காண முடி யாத அல்லது காணத் தகு தியற்ற மக்களை அந்தக் கடவுள் ஏன் படைத்தார்? படைத்த பின்னர், கடவுளைக் காணவோ, அறியவோ முடி யாத கொடியவர்கள் என்று சிலரைக் கண்டிப்பானேன்? கடவுளைக் கண்டு - அவரை வழிபட்டு - பேரின்பப் பெரு வாழ்வு அடைவதற்கே இம் மக்கட் பிறப்புக் கடவுளா லேயே அருளப்பட்டதென்று சொல்லிய பின், கடவுளைக் காண முடியாத நிலைமையை உண்டாக்கும் ஒரு கடவுளைப் போன்ற அறிவுக்குப் புறம் பான ஒன்று உலகில் வேறு யாதாயினும் இருக்க முடி யுமா?
- இவ்வளவையும் அடுக் கடுக்காக அள்ளிக் கொடுத் துள்ளவர் அறிஞர் அண்ணா! (‘திராவிட நாடு', 1.10.1944, பக்கம் 4 மற்றும் 9).
இதுதான் அறிஞர் அண் ணாவின் கடவுள் மறுப்புக் கொள்கை.
- மயிலாடன்
No comments:
Post a Comment