அறிஞர் அண்ணா, திராவிடர் இயக்கத் தின் மூத்த முன்னோடி தளபதி. தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் தலைமகன். அவரது 112 ஆவது பிறந்த நாளான இன்று (15.9.2020) கரோனா கொடுந்தொற்று சாக்கில் மாநில உரிமைகளும், மனித உரிமைகளும் பறிபோகும் இக்கால கட்டத்தில், தனது உயிலாக மாநில சுயாட்சி யையும், சமூகநீதியையும், பகுத்தறிவு, மதச் சார்பின்மையைக் காக்க தந்தை பெரியாருக்கே தனது அமைச்சரவையை அர்ப்பணித்த அந்தத் தமிழ் மகனின் - திராவிடப் பேரியக்கத்தின் தளநாயகனை உற்சாகமூட்டியாகக் கொண்டு, உரிமை களைக் காக்க, களங்கண்டு போராடவும் சூளுரை ஏற்போம்!
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!
அண்ணா பிறந்த நாள் வாழ்த்துகள்!!!
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
15.9.2020
No comments:
Post a Comment