பணிமூப்பு, பணி உயர்வுகளில் இடஒதுக்கீடு மத்திய அரசுக்கு இரா.முத்தரசன் வலியுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 4, 2020

பணிமூப்பு, பணி உயர்வுகளில் இடஒதுக்கீடு மத்திய அரசுக்கு இரா.முத்தரசன் வலியுறுத்தல்


சென்னை, செப். 4- சமூக நீதி அமலாக்கத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட ஜாதியினர் மற்றும் பழங் குடியின மக்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில், மத்திய, மாநில அரசுகள் இட ஒதுக்கீடு வழங்கி வருகின்றன.


ஆனால் இதன் தொடச்சியாக பணி மூப்பு பட்டியலிடுவதிலும், பதவி உயர்வு வழங்குவதிலும்  இடஒதுக்கீடு கடைப்பிடிப் பதில்லை. இதற்கான சட்டப்பூர்வ வழிவகை கள் செய்யப்படவில்லை என்ப தால், பணி மூப்பு மற்றும் பணியுயர்வு வழங்கல் தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் (பணி நிபந்தனைகள், சட்டத்தில் சில திருத் தங்களை செய்தது. இதனை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் செல்லாது என அறிவித்தன. இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைக் குழுவும் நடத்தி வரும் சட்டப் போராட்டத்தில்  உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுத்தாக்கல் செய்தி ருந்தன. இதனை விசாரித்த மூன்று நீதிபதிகள் அமர்வு மன்றம், சீராய்வு மனுவை தள்ளுபடி செய்துள்ளது. இதனால் 2 லட்சத்துக்கும் அதிகமான அரசுப் பணியாளர்களுக்கு சமூகநீதி மறுக்கப்பட்டு, பாதிக்கப்படுவர். இதனால் சமூக நீதி வழங்கலின் நோக்கம் முழு மையடையாமல் தடைபட்டுவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


இது தொடர்பாக அரசியல் அமைப்புச் சட்டத்தில் பொருத்தமான திருத்தம் செய்து, பணி மூப்பு மற்றும் பணி உயர்வுகளிலும்  இட ஒதுக்கீடு வழங்க சட்டப்பூர்வ வழிவகை செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துவதுடன், தமிழ்நாடு அரசும். முதலமைச் சரும்,  தமிழக மக்களின் கருத்தைத் திரட்டி மத்திய அரசுக்கு வலு வான அழுத்தம் கொடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


No comments:

Post a Comment