சுயமரியாதைச் சுடரொளி இரா.இராமன் அவர்களின் படத்திறப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 10, 2020

சுயமரியாதைச் சுடரொளி இரா.இராமன் அவர்களின் படத்திறப்பு


வேலூர், செப். 10-  வேலூர் மாவட்ட திராவிடர் கழகத் தின் சார்பில்  வேலூர் மாவட் டம் குடியாத்தம் நகர திரா விடர் கழக செயலாளரும், அரசுப் போக்குவரத்து கழக ஓய்வுபெற்ற பணியாளருமான மறைந்த இரா.இராமன் அவர்களின் படத்திறப்பு 6.9.2020 ஞாயிறு பிற்பகல் 2.00 மணியளவில் வேலூர் மாவட்டத் தலைவர் வி.இ. சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது.


இராமன் அவர்களின் மரு மகன் சிவக்குமார் வரவேற் றார்.  இரா.இராமன்  அவர்க ளின் உருவப்படத்தை வேலூர் மண்டலத் தலைவர் வி.சட கோபன் திறந்து வைத்தார். வேலூர் நகர்மன்ற மேனாள் துணைத் தலைவர், நகர தி.மு. க.பொறுப்பாளர் எஸ்.சவுந் தர்ராசன் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்.


மாநில மகளிரணி அமைப் பாளர் ந.தேன்மொழி, வேலூர் மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைச் செயலாளர் கு.விவேக் உள் பட பலர் நினைவேந்தல் உரையாற்றினார்.


வேலூர் மாவட்ட பகுத்த றிவாளர் கழகத் தலைவர் இர.அன்பரசன், மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர் சி.லதா, நகர கழக அமைப் பாளர் வி.மோகன், நகரத் தலைவர் சாந்தகுமார், மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் கவிஞர் தூயவன் (எ) ம.ஜ. சந்தீப், நகர திமுக கலை இலக் கிய பகுத்தறிவுப் பேரவை அமைப்பாளர் ந.ஜம்புலிங்கம், நகர திமுக நெசவாளரணி துணை அமைப்பாளர் ஜெ. பிரபாகரன், நகர இளைஞ ரணி மோகன்ராஜ், வ.பெரு மாள் ஆகியோர் கலந்து கொண் டனர். இறுதியில் இராமன் அவர்களின் மகள் இரா.அறி வழகி நன்றி கூறினார்.


No comments:

Post a Comment