சட்டமன்ற செய்திகள் - 'நீட்' தேர்வை ரத்து செய்ய மறுத்த மத்திய அரசைக் கண்டித்து சட்டமன்றத்தில்  கண்டனத் தீர்மானம் கொண்டு வரவேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 15, 2020

சட்டமன்ற செய்திகள் - 'நீட்' தேர்வை ரத்து செய்ய மறுத்த மத்திய அரசைக் கண்டித்து சட்டமன்றத்தில்  கண்டனத் தீர்மானம் கொண்டு வரவேண்டும்

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் வலியுறுத்தல்



சென்னை,செப்.15, 'நீட்' தேர்வை ரத்து செய்ய மறுத்த மத்திய அரசைக் கண்டித்தும், மத்திய அமைச்சர் பியூஸ் கோயலைக் கண்டித்தும் இந்த சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே கண்டனத் தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று சட்டமன்றத்தில் இன்று (15.9.2020) தமிழக எதிர்க் கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டா லின் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.


இன்று சட்டமன்றத்தில் கேள்வி நேரம் முடிந்தவுடன் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் இது தொடர்பான தீர்மானத்தின்மீது பேசுகையில், அரியலூர் அனிதா தொடங்கி திருச் செங்கோடு மோதிலால் வரை மாணவ, மாணவிகள் நீட் தேர்வுக்கு பயந்து மாண்டுள்ளார்கள். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டி தமிழ கத்தில் திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் மத்திய அரசை வற் புறுத்திக் கொண்டிருக் கின்றன.


இதே மன்றத்தில் ஏகமனதாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்து மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப் பட்டது. மேலும் இரண்டு மசோ தாக்கள் இது தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், இந்த அரசை மத்திய அரசு மதிக்கவில்லை.


கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி மதுரை ஜோதிசிறீ துர்கா, தருமபுரி ஆதித்யா, திருச்செங்கோடு மோதி லால் ஆகிய மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டு மாண் டனர். தற்கொலை செய்து கொண்ட ஜோதிசிறீ துர்கா "I am sorry, I am tired" என்று  பெற்றோருக்கு எழுதி வைத்து மாண்டுள்ளார்.


தற்பொழுது நடந்த நீட் தேர்வில் கெடுபிடிகள், பசிக்கொடுமை, அடிப் படை வசதிக ளின்றி, தாலி உள்ளிட்ட அணிகலன் களை அகற்றப் பட்டு பல கொடு மைகளை மாணவர்கள் அனுப வித்தனர். ஏற்கெனவே தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட் டிருந்த நிலையில் இந்த நீட் தேர்வு கொடுமை வேறு.


எனவே, நீட் தேர்வை ரத்து செய்ய மறுத்த மத்திய அரசைக் கண்டித்தும், மத்திய அமைச்சர்  பியூஸ் கோயலைக் கண்டித்தும் இந்த சட்ட மன்றக் கூட்டத் தொடரிலேயே கண்டனத் தீர் மானம் கொண்டு வர வேண்டும்.


12ஆம் வகுப்பு தேர்வு மதிப் பெண்கள் அடிப்படையிலே மருத் துவச் சேர்க்கை நடைபெற வழிவகை செய்யப்பட வேண்டும் என்றார்.


சட்டமன்றத்தில்


'நீட்' குறித்து விவாதம்


'நீட்' தேர்வுப் பிரச்சினை குறித்து தமிழக சட்டமன்ற எதிரக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்த வேண்டு கோளுக்கு பதில் அளித்துப் பேசிய தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் குறிப் பிட்டதாவது:


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது ஓராண்டு விலக்கு பெற்றுக் கொடுத்தார். பின்னர் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு நாமெல்லாம் கட்டுப்பட்டவர்கள். அதன்பிறகு முத லமைச்சர் எடப்பாடியார் அவர்கள் நீட் டுக்கு விலக்கு கோரி பிரதமரை சந்தித்து மனு கொடுத்தார்.


முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் அவர்கள் இந்த நீட் தேர்வு வழக்கில்   'நீட்' தேர்வுக்கு விலக்கு அளிக்கக் கூடாது என்று வாதாடி உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குத் துணை நின்றார்.


அதிமுக அரசு நீட் எதிர்ப்பில் உறுதியாக உள்ளது. எதிர்க்கட்சிகள் நீட் தேர்வை ரத்து செய்ய வழி சொல்லுங்கள். இப்பொழுதே செய்கிறோம் என்றார்.


மு.க.ஸ்டாலின்: நீட் தேர்வை எதிர்த்து எல்லோரும் போராடத் தயாராக இருக் கிறோம். ஜல்லிக்கட்டுப் பிரச் சினையில் உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வந்ததும், மத்திய அரசை வலியுறுத்தி சட்ட முன்வடிவை உருவாக்கி தீர்மானம் போட்டு தமிழகம் வெற்றி பெற்றது. அதேபோல்தான் நீட் பிரச் சினையில் ரத்து  செய்ய வேண்டி மத்திய அரசுக்கு அழுத்தத்தைத் தரவேண்டும் என்றார்.


அமைச்சர் பதில்: ஜல் லிக்கட்டு பிரச்சினை தமிழகப் பிரச்சினை. வேறு எந்த மாநிலத்திலும் ஜல்லிக்கட்டு இல்லை. நீட் தேர்வு அனைத்து மாநிலங்களிலும் நடை பெறுகிறது. மற்ற மாநிலங்கள் எல்லாம் நீட்டை ஏற்றுக் கொண்டன. ஜல்லிக்கட்டு பிரச்சினை போன்ற வழி வகை நீட்டில் இல்லை என்றார்.


மருத்துவ இடங்கள்: 1947 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் 1945 மருத்துவ இடங்கள் மட்டும் இருந் தன. தற்பொழுது 3,050 இடங்கள் உள்ளன. இதில், 15 விழுக்காடு அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்பட் டுள்ளது. அதிலும் தமிழக மாண வர்கள் பங்கேற்கலாம். மீதி 85 விழுக் காடு மருத்துவ இடங்கள் தமிழகத்தில் உள்ள வர்களுக்குத்தான் என்றார்.


காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளியேற்றம்: நீட் பிரச்சி னையில் காங்கிரஸ்மீது அதிமுக உறுப்பினர் சாட்டிய குற்றச் சாட்டைத் தொடர்ந்து அதற்கு  காங்கிரஸ் உறுப்பினர்கள் பேரவைத் தலைவரின் இருக்கை அருகே வந்து எதிர்ப்பு தெரிவித்த நிலையில்,  காங் கிரஸ் தலைவர் கே.ஆர்.இராமசாமி உள்ளிட்ட காங்கிரஸ் உறுப் பினர்கள் அவையிலிருந்து வெளியேற் றப்பட் டனர்.


பேரறிஞர் அண்ணா கொள்கைகளுக்கு ஆபத்து


தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் உரையாற்றுகையில்: இன்று அறிஞர் அண்ணாவின் 112ஆவது ஆண்டு பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறோம். இரு மொழிக் கொள்கை, மாநில சுயாட்சி தீர்மானங்களை இந்தப் பேரவையில் நிறைவேற்றியவர் அறிஞர் அண்ணா. அவர் நிறைவேற்றிய இந்த தீர்மானங்களுக்கும் ஆபத்து வந் துள்ளது. இருமொழி கொள்கை, மாநில சுயாட்சியை காக்க அண்ணா பிறந்தநாளில் உறுதியேற்போம் என தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment