கழகத் தோழர் மா.சுந்தரம் மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 6, 2020

கழகத் தோழர் மா.சுந்தரம் மறைவு


பெரியார் தொண்டரும், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் பேரன்பு கொண்டவரும், பழம்பெரும் சுயமரியாதை இயக்க வீரர் மாணிக்க வாசகம் - ஆனந்தம் மாள் ஆகியோரது மகனும், 'விடுதலை' ஏட் டில் அச்சுக் கோர்ப்பாளராகப் பணிபுரிந்த வருமான கழகத் தோழர் மா.சுந்தரம் (வயது 80) முதுமை மற்றும் உடல் நலக் குறைவால் 5.9.2020 சனிக்கிழமை பிற்பகல் 2.45 மணிக்கு காலமானார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவருக்கு மல்லிகா என்ற மனைவி யும், குணசுந்தரி, ஜீவிதா ஆகிய மகள்களும் உள்ளனர். மா.சுந்தரத்தின் தந்தையார் மாணிக்கவாசகம் 'விடுதலை‘ ஏட்டின் துணை ஆசிரியராக நீண்ட காலம் பணி செய்தவர் ஆவார்.


மா.சுந்தரம் மறைவுக்கு கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இரங்கல் தெரிவித்தார். துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களும் இரங்கல் தெரிவித்தார்.


இன்று (6.9.2020) காலை 8 மணிக்கு, 'விடுதலை' அலுவல கத்தின் சார்பில் வடசென்னை மாவட்ட துணைத் தலைவர் கி.இராமலிங்கம் மா.சுந்தரம் உடலுக்கு மலர் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். கழகத்தின் சார்பில் தென் சென்னை மாவட்ட துணைச் செயலாளர் அரும்பாக்கம் சா.தாமோதரன், அமைப்பாளர் மு.ந.மதியழகன், நிழற்படக் கலைஞர் பா.சிவக்குமார், ப.ஆனந்தன், சா.அரிகுமார் மற்றும் தோழர்கள் மலர் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.


காலை 10.30 மணி அளவில் மேற்கு சைதாப்பேட்டை காரணி தோட்டம் இல்லத்திலிருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு, சைதாப்பேட்டை இடுகாட்டில் இறுதி நிகழ்வுகள் நடந்தேறியது.


No comments:

Post a Comment