பரிசுத்தம் பேசும் பா.ஜ.க.வுக்கு அர்ப்பணம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 27, 2020

பரிசுத்தம் பேசும் பா.ஜ.க.வுக்கு அர்ப்பணம்!

பா.ஜ.க. மேனாள் மத்திய அமைச்சருக்கு ஊழல் வழக்கில்


மூன்றாண்டு சிறைத் தண்டனை


ராஞ்சி, அக்.27 வாஜ்பேயி பிரதமராக இருந்த போது, கடந்த 1999 ஆம் ஆண்டு முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் மத்திய நிலக் கரித்துறை இணையமைச்சராக இருந்தவர் திலீப் ராய்.இவர் 2009 ஆம் ஆண்டு பா.ஜ.கவில் இணைந்தார் திலிப் ராய்


முன்னதாக திலீப் ராய் அமைச் சராக இருந்த காலத்தின் போது, ஜார்கண்ட் மாநிலத்தில் சி.டி.எல் என்ற நிறுவனத்துக்கு நிலக்கரிச் சுரங்கம் ஒதுக்கப்பட்டதில் முறை கேடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.


இந்த புகாரின் பேரில், திலீப் ராய் நிலக்கரி ஊழல் தொடர்பாக வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கு டில்லி சி.பி.அய் சிறப்பு நீதிமன்றம் தொடர்ந்து விசாரித்து வந்தது. இந்த நிலையில், வாதங்கள் அனைத்தும் முடிந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.


இந்த நிலையில் இந்த வழக்கில் டில்லி ரோஸ் அவனீவ் மாவட்ட நீதிமன்ற நீதிபதி பாரத் பராசர்  தீர்ப்பை வழங்கியுள்ளார். அதில், “கடந்த 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற நிலக்கரி ஊழலில் முன்னாள் அமைச்சர் திலீப் ராய் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபணம் ஆகியுள்ளது. அதனால் இந்த விவகாரத்தில் அவரை குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. தண்டனை விவரங்கள் வரும் பின்னர் அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்திருந்தர்.


இந்நிலையில், நிலக்கரி ஊழல் வழக்கில் திலீப் ராய், நிலக்கரித்துறை அமைச்சக அதிகாரிகள் உள்ளிட்ட 3 பேருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்ற நீதிபதி பரத் பராசர் இன்று தீர்ப் பளித்தார்.


இதுதொடர்பாக அவர் அளித் துள்ள தீர்ப்பில், “நிலக்கரி ஊழலில் முன்னாள் மத்திய அமைச்சர் திலீப் ராய், நிலக்கரித்துறை அமைச்சக அதிகாரிகள் பிரதீப் குமார் பானர்ஜி, நித்யானந்த் கவுதம், கேஸ்ட்ரான் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் இயக்குநர் மகேந்திர குமார் அக்ரா வாலா ஆகியோருக்கும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. மேலும், இவர்கள் தலா ரூ.10 லட்சம் அபராதமும் செலுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.


 வாஜ்பேயி அமைச்சரவையில் உள்துறை இணை அமைச்சராக இருந்த சாமியார் சின்மயானந்தா தனது கல்லூரியில் படிக்கும் பெண்களை பாலியல்வன்கொடுமை செய்ததாகக் கூறியவழக்கில் சிறையில் இருக்கும் நிலையில் அந்த அமைச்சரவையில் இருந்த இரண்டாவது அமைச்சரும் தற்போது ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை பெற்றுள்ளார்.


No comments:

Post a Comment