தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் கண்டனம்
சென்னை, அக்.27 அரசு பள்ளி மாண வர்களுக்கான 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டு தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்காமல், காலம் தாழ்த்தி நீர்த்துப்போகச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் ஆளுநர் செயல் படுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டா லின் குற்றம் சாட்டியுள்ளார்.
திமுக தலைவரும் சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவரு மான மு.க.ஸ்டாலின் சென்னையில் நேற்று (27.10.2020) நடந்த திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையில், “நாம் எதிர் நோக்கிக் காத்துக் கொண்டிருக்கிற பொதுத் தேர்தல் மிக விரைவில் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதற்கான ஆயத்தப் பணிகளில் நாம் ஈடுபட்டுக் கொண்டிருக்கி றோம். இன்றைக்கு நாட்டின் சூழ் நிலை எப்படி இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். எப்படிப் பட்ட ஆட்சி நடந்து கொண்டிருக் கிறது என்பதும் உங்களுக்குத் தெரியும்.
மத்தியில் இருக்கும் பாஜக ஆட்சிக்கு அடிமையாக, கூனிக் குறுகி இன்றைக்கு ஒரு சேவகனாக அடிமைத்தனமாக இருந்து கொண் டிருக்கக்கூடிய ஆட்சிதான் தமிழ் நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. வேறு ஒன்றும் நான் உதாரணம் சொல்ல வேண்டிய அவசியமில்லை'' என்றார்.தமிழ்நாடு ஆளுநர் ஒரு அனுமதி தருவதில் உள்ள சிக்கல் என்ன என்பது உங்களுக்குத் தெரி யும். சென்னையில் மிகப்பெரிய போராட் டத்தைச் நடத்தினோம். எதற்காக என் றால், ஏழை - எளிய மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு என்னென்ன இடர் பாடுகளை எல்லாம் தந்திட வேண் டுமோ - நீட் தேர்வைக் கொண்டு வந்து மாணவர்களின் மருத்துவப் படிப்பை பாழ்படுத்தி வருகிறார் களோ - அவற்றை ஓரளவிற்குச் சரி செய்ய வேண்டும் என்பதற்காகத் தான், அரசுப் பள்ளி மாணவர் களுக்காக போராடினோம்.
10 சதவீத இடஒதுக்கீட்டுக்கான பரிந்துரையை நீதியரசர் கலையரசன் அவர்கள் தலைமையிலான குழு அரசிடம் தந்திருந்தாலும், அதை யும் இந்த ஆட்சி குறைத்து 7.5 சதவீதம் வழங்க வேண்டும் என்று சட்டப் பேரவையில் ஒரு தீர்மானத் தைக் கொண்டு வந்து அதை மசோதாவாக நிறைவேற்றி ஏக மனதாக திமுக உள்ளிட்ட எல்லாக் கட்சிகளும் அதை ஆதரித்து, ஆளு நருக்கு அனுப்பி வைத்தோம். அனுப்பிவைத்து ஏறக்குறைய நாற் பது நாள்கள் ஆகி விட்டன.ஆனால், ஆளுநர் இன்னும் அதற்கு ஒப்புதல் தரவில்லை. தருவார், தருவார் என்று காத்திருந்தும் அவர் அனுமதி தரவில்லை.இங்கிருக்கும் அமைச்சர்கள் ஆளுநரைச் சந்தித் துக் கேட்டபோது, அவர் என்ன சொன்னார் என்பதை அமைச்சர் கள் வெளியில் சொல்லவில்லை.அதற்குப்பிறகு ‘7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டுக்காக நாங்கள் சட்டப் பேரவையில் நிறை வேற்றிய மசோ தாவுக்கு ஒப்புதல் தாருங்கள்’ என்று நானே ஆளுநருக்கு கடிதம் அனுப்பி னேன்.
அதற்கு ஆளுநர் அனுப்பிய பதிலில், “நீங்கள் சொன்னதைப் புரிந்து கொண்டேன். ஆனால் அது குறித்து பரிசீலித்துத்தான் முடிவெ டுக்க முடியும். முடிவெடுக்க
4 வாரங்கள் அவகாசம் வேண்டும்” என்று எழுதியிருந்தார். எப்படியா வது காலம் தாழ்த்தி இதை நீர்த்துப்போகச் செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் ஆளுநர் இருக் கிறார்'' என்று குற்றம் சாட்டினார்.அதிமுகவின் கொள்கை என்ன, கொள்ளையடிப்பது, ஊழல் செய் வது, கமிஷன் கேட்பது. நம்முடைய கொள்கை என்ன? நாட்டுக்காகப் பாடுபடுவது, நாட்டு மக்கள் பிரச்சி னைகளுக்காகப் போராடுவது, உரிமைகளை மீட்கப் போராடுவது.இப்படிப்பட்ட கொடுமையில் இருந்து தமிழ்நாட் டைக் காப்பாற்ற இந்த ஆட்சியை ஒழிக்க வேண்டும். அதற்கான வாய்ப்பு வரவிருக்கும் சட்டப் பேரவைத் தேர்தல்தான். அதை நீங்கள் நல்லவகையில் பயன் படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் கூறினார்.
No comments:
Post a Comment