அன்று சொன்னதும் - இதே முதல்வர்தான்!
மக்களிடம் வித்தியாசம் காட்டாத இறைவனைப்போல் நோயாளிகளுக்குச் சேவையாற்ற வேண்டும்: - மருத்துவர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி அறிவுரை.
அப்படி என்றால், கரோனா பணக்காரர்களுக்கு வரும் நோய் என்று முதலமைச்சர் சொன்னாரே - அது எப்படி?
அடிமடியிலேயே கைவைப்பு!
மருத்துவ கல்லூரிகளில் 50 சதவிகித இட ஒதுக்கீடு தராவிட்டால் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என முதலமைச்சர் அறிவிக்கவேண்டும்: - தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்
அடிமடியிலேயே கை வைத்தால் எப்படி?
அந்த அளவுக்கு அ.தி.மு.க. போகாது என்பது மத்திய அரசுக்கு நன்றாகவே தெரியும்.
தரிசனத்தில் பல ‘கிளாஸ்கள்!'
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசன முறை மீண்டும் தொடக்கம்.
தரிசனத்தில் கூட ஃபர்ஸ்ட் கிளாஸ், செகண்ட் கிளாஸ், தரை டிக்கெட் உண்டோ!
பக்தி ஒரு பிசினஸ் என்று சங்கராச்சாரியார் சொன்ன பிறகு, நமக்கென்ன வேலை?
எட்டு முறை படையெடுத்தால்தான்...
உ.பி.யில் ஏழை இரும்பு வியாபாரியின் மகன் எட்டு முறை 'நீட்' தேர்வு எழுதிய பிறகு வெற்றி!
ஆமாம், ஏழைகள் 'நீட்'டில் வெற்றி பெற வேண்டுமானால் எட்டுமுறை படையெடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment