சென்னை,அக்.27, மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெலங்கானா மாநிலத் துக்கு 10 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருவதுடன் கரை யோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்யப் பட்டு வருகின்றனர்.
கனமழையால் ஏராளமானோர் வீடுகளை இழந்து தவித்து வருவதுடன், உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தெலங்கானா மாநிலத்துக்கு 10 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவுக்கு கடிதம் எழுதியுள்ளார். தெலங்கானா வுக்கு தேவையான உதவிகள், தமிழக அரசு சார்பில் செய்து தரப்படும் எனவும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நேரலையில் வழக்கு விசாரணைகள்
காந்திநகர்,அக்.27, சில மாநிலங்களில் நீதிமன்ற விசாரணை காணொலி மூல மாக நடைபெற்று கொண்டிருக்கின்றன. தற்பொழுது நாட்டிலேயே முதல் முறையாக குஜராத் நீதிமன்றம் வழக்கு விசாரணையை நேரலை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நேரலை <https://www.youtube.com/watch?v=WpqQWBERB_Y> யூ-டியூப் வலைத்தளத்தில் நேரலை செய்யப்படுகிறது.
பன்னாட்டளவில் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. ஊரடங்கு விதிக்கப்பட்டும், பின்னர் அவ்வப்போது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டும் வரு கின்றன. கரோனா முடக்கம் காணமாக தொழில்கள் முடங்கிப்போயின. தொழி லாளர்கள் சொல்லொவொண்ணாத் துயருக்கு உள்ளானார்கள். நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு மோசமான விளைவுகள் ஏற்பட்டு வருகின்றன. கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பினைத் தொடர்ந்து, சிகிச்சைகள், குணமாதல், உயிரிழப்புகள் என தொடர்ந்துகொண்டிருக்கின்றன.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பல்வேறு நாடுகள் ஊரடங்கு, பல்வேறு கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகின்றன. ஊர டங்கு கட்டுப்பாடுகள் தொடர்வதால், பள்ளிக்கூட பாடங்கள் ஆன் லைன் மூலமாக மாணவர்களுக்கு நடத்தப்பெற்று வருகின்ற நிலையில், காணொலி வாயிலாக நீதிமன்றப் பணிகள் நடைபெற்று வரும்நிலையில், குஜராத் மாநிலத்தில் இணையத்தின் வாயிலாக அனைவரும் நீதிமன்ற வழக்கு விசா ரணைக் காட்சியை நேரலையாகக் காண ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment