மயிலாடுதுறை வள்ளலார் கோயிலில் 1200 ஆண்டு பழைமையான சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 29, 2020

மயிலாடுதுறை வள்ளலார் கோயிலில் 1200 ஆண்டு பழைமையான சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு


மயிலாடுதுறை, அக்.29 மயி லாடுதுறை அருகே 1200 ஆண்டு பழைமை வாய்ந்த வள்ளலார் கோயில் வளாகத்தில் சுரங்கப் பாதை கண்டுபிடிக்கப்பட்டது. 


இவ்வளாகத்தில் 10 அடி ஆழத்தில் குழி தோண்டியபோது கோயிலின் உள்பிரகார சுவற்றை ஒட்டியவாறு மிகப்பழைமை வாய்ந்த மெல்லிய செங்கற்களால் 4 அடிக்கு 4அடி கொண்ட சுவர் ஒன்று இருந்தது. அந்த சுவற்றை உடைத்து பார்த்தபோது சுரங்கம் ஒன்று இருந்தது தெரியவந்தது.


அதன் உள்ளே 10அடி தூரம்வரை சென்று பார்த்தபோது அங்கே ஒரு சுவர் உள்ளது தெரிய வந்தது. இதுகுறித்து ஓய்வுபெற்ற தொல்லியல்துறை ஆய்வாளர் முத்துச்சாமி கூறுகையில், தஞ்சையை ஆண்ட சோழர்களின் இளம் வாரிசுகளுக்கு போர் பயிற்சி உட்பட அனைத்து பயிற்சிகளும் மிகவும் ரகசியமாக கோயில் வளாகத்தில் தான் அமைக்கப்பட்டு வந்துள்ளது. அனைத்து பயிற்சிகளும் முடிந்த பிறகு அவர்களுக்கு முடிசூட்டி அவர்களை அரண்மனைக்கு அழைத்து செல்வார்கள்.


மயிலாடுதுறைக்கு வடக்கே வரகடை என்ற இடத்தில் இரண்டு ஆறுகள் இணையும் இடத்தில் உள்ள கோயிலில் இதன் வரலாறு தெரிய வந்துள் ளது, இதே போன்றுதான் இந்த ஆலயத்திற்கு அடிக்கடி அரச வாரிசுகள் வருவதும் தங்குவதும் வாடிக்கையாக இருந்திருக்கலாம். ஆலயத்தில் இருக்கும் காலத்தில் ஆபத்து என்றால் இதுபோன்ற சுரங்கப்பாதையின் வழியே தப் பித்து செல்வதற்கான முன் ஏற்பாடுதான் இந்த சுரங்கப்பாதை யாகும். இந்த சுரங்கப்பாதை சுமார் 10 அடி தூரம் உள்ளது என்றார்.


No comments:

Post a Comment