விலைவாசி உயர்வு : உத்தரப்பிரதேச அரசுக்கு பிரியங்கா கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 29, 2020

விலைவாசி உயர்வு : உத்தரப்பிரதேச அரசுக்கு பிரியங்கா கண்டனம்


புதுடில்லி, அக்.29 காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா, விலைவாசி உயர்வு தொடர்பாக உத்தரப்பிரதேச மாநில அரசை கடுமையாக விமர்சித்தார்.


 லக்னோவின் காய்கறி விலை நிலவர பட்டியலை தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டு அவர் கூறியிருப்பதாவது:-


மத விழாக் காலத்தில் விலைவாசி உயர்வு, சாமானியர்கள் மீது பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. காய்கறி விலை, விண்ணை முட்டும் அளவுக்கு சென்று விட்டது. அதனால், பணிகளும், வர்த்தகங்களும் முடங்கி உள்ளன. ஆனால், பொய் பிரசாரத்துக்கு கோடிக் கணக்கில் செலவிடும் உத்தரப்பிரதேச அரசு, மக்கள் பிரச்சினைகளில் மவுனம் சாதித்து வருகிறது.


இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


 


கேரளாவில் காய்கறிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம்


திருவனந்தபுரம், அக்.29 கேரள முதல் அமைச்சர் பினராயி விஜயன் காய்கறி களுக்கு அரசே விலை நிர்ணயம் செய்யும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்தார்.


இந்த திட்டம் விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும். விவசாயிகள் உற் பத்தி செய்யும் காய்கறிகளின் விலையில் இருந்து 20 சதவீதத்துக்கும் அதிகமாக கணக்கீட்டு விற்பனை செய்யப்படும்.


காய்கறிகளின் விலையை அரசே நிர்ணயிக்கும். சந்தைகளில் காய்கறிகளின் விலை குறைந்தாலும் கூட அதற்கு கூடுதலான விலையில் விவசாயிகளிடம் இருந்து காய்கறிகள் கொள்முதல் செய்யப்படும்.


விவசாயிகளிடம் இருந்து காய்கறிகளை கொள்முதல் செய்யவும், அவற்றை விற் பனை செய்யவும் உள்ளாட்சி அமைப்புகள் முக்கிய பங்கு வகிக்கும்.


இந்த திட்டமானது ஒரு பருவத்தில் 15 ஏக்கருக்கும் அதிகமாக காய்கறிகள் பயிரிடும் விவசாயிகளுக்கு மிகுந்த பலன் அளிக்கும். இந்த திட்டத்தில் சேர விரும்பும் விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் காய்கறிகள் இந்த திட்டத்தின் பட்டியலில் இருக்கிறதா? என தெரிந்து கொண்டு வேளாண்மை துறை இணைய தளத்தில் வருகிற 1-ஆம் தேதி முதல் பதிவு செய்யலாம்.


மாநிலத்தில் விவசாயத் துறையை மேம்படுத்த ஏராளமான முயற்சிகளை கேரள அரசு எடுத்து வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் மாநிலத்தில் காய்கறிகளின் உற்பத்தி 7 லட்சம் டன்னில் இருந்து 14.72 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. நடப்பாண்டில் இதனை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இவ்வாறு அவர் கூறினார்.


 


No comments:

Post a Comment