பங்காருபுரம் சமத்துவபுர பெரியார் சிலையை அவமரியாதை செய்த காலிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 29, 2020

பங்காருபுரம் சமத்துவபுர பெரியார் சிலையை அவமரியாதை செய்த காலிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்


திண்டுக்கல், அக்.29 திண்டுக்கல் மாவட் டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், பங்கா ருபுரம் சமத்துவபுரத்தில் நிறுவப்பட்டுள்ள அறிவுலக ஆசான் தந்தை பெரியார் சிலையின் மீது 26.10.2020 அன்று இரவு சமூக விரோதிகள் சிலர் காவிசாயம் பூசப்பட்டதை, அறிந்து உடனடியாக பழனி சட்டமன்ற உறுப்பினரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான  இ.பெ.செந்தில்குமார் அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார் . தொடரந்து சமூக விரோதிகளை கைது செய்யக் கோரி புகார் அளித்தார்


அந்தப் புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரியும், பெரியார் சிலையை அவமரியாதை செய்த காலி களைக் கண்டித்தும் 27.10.2020 அன்று பெரியாரிய கூட்டமைப்பு சார்பாக ரெட்டி யார்சத்திரம் பேருந்து நிறுத்தத்தில், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய திமு.க. செயலாளரும், சீரிய பகுத்தறிவுவாதியுமான சிவகுருசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இந்த ஆர்ப்பாட்டத்தில் திண்டுக்கல் திராவிடர் கழக மாவட்டத் தலைவர் இரா.வீரபாண்டி, மண்டல கழகத் தலைவர் நாகராசன், திண்டுக்கல் நகர செயலாளர் , வழக்குரைஞர் ஆனந்த முனிராசன், பழனி மாவட்டத் தலைவர் இரணியன், திண் டுக்கல் மாவட்ட துணைத் தலைவர் கருணாநிதி, திண்டுக்கல் மாவட்ட இணை செயலாளர்  காஞ்சித்துரை, திண்டுக்கல் மாவட்ட ப.க. தலைவர் செல்வம்  மற்றும்  பழனி மாவட்ட ப.க. தலைவர் திராவிட செல்வன், பழனி நகர செயலாளர் இராதா, பழனி ஒன்றிய செயலாளர் முருகன், தொப்பம்பட்டி ஒன்றிய செயலாளர் பாலு, பழனி மாவட்ட இளைஞரணி தலைவர் பொன்.அருண்குமார், பாலன், முருகன் மற்றும்  இவ்வார்ப்பாட்டத்தில் பெரியாரிய உணர்வாளர்களும், தி.மு.க.  பொறுப்பாளர் கள்  அசன்முகமது , தலைமையிலும்


200-க்கும் மேற்பட்ட பெரியாரிய உணர் வாளர்கள் கலந்துகொண்டனர் .


இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெரியார் சிலையை அவமரியாதை செய்த காலிகளைக் கைது செய்து குண்டர் சட்டத்தில் கைது செய்யக் கோரியும், ஆர்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனர்.


இதில் ரெட்டியார்சத்திரம் பொது மக்கள் நுற்றுக்கணக்கில் ஆர்ப்பாட்டம் முடியும்வரை நின்று கேட்டனர்.  பின்னர் பெரியாரிய கூட்டமைப்பினர் பங்காருபுரம் என்ற இடத்தில் உள்ள சமத்துவபுரம் சென்று பெரியார் சிலைக்கு ரெட்டியார் சத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் சிவ குருசாமி அவர்கள் தலைமையில், திண் டுக்கல் மாவட்டத் தலைவர் வீரபாண்டி அவர்கள் மாலை அணிவித்தார் .


இந்நிகழ்விலும் திமுக சார்பில் அசன்முகமது, ரெட்டியார்சத்திரம் ஒன்றிய குழு ரெங்கசாமி உள்ளிட்ட ஏராளமான திமுக தோழர்களும், விசிக மாவட்ட பொறுப்பாளர் ஆப்ரகாம் தலைமையில் திரளான தோழர்களும் மற்றும் பெரி யாரிய கூட்டமைப்பினைச் சார்ந்த தோழர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.


No comments:

Post a Comment