பாமர மக்கள் கல்வி இல்லாமல் இருக்கும்படிக்கும், அவர் களுக்குச் செல்வம் சேராமல் இருக்கும் படிக்கும் பல தடைகளை மதத்தின் பெயரால், கடவுள் பெயரால் தேசியத்தின் பெயரால் ஏற்படுத்தி 100-க்கு 90-மக்களை 100-க்கு 10 மக்கள் ஏமாற்றி வரு கின்றார்கள். இந்த சூழ்ச்சி மாறுதலடைய வேண்டுமானால் கடவுள், மதம், தெய்வீகம், தேசியம் முதலாகிய எல்லா புரட்டுகளையும் வெளியாக்கி உடைத்தெரிய வேண்டும் அதற்கு மக்கள் சம்மதிப்ப தென்பது மிகக் கஷ்டமான காரியமாகும். ஏனெனில் இவை சம் பந்தமான மூட நம்பிக்கையும், பிடிவாதமும் நம் மக்களது இரத்தத் தில் ஊறிப்போய்விட்டது. அதுமாத்திரமல்லாமல் இந்த மூன்று துறைகளின் பிரசாரத்தையும், வயிற்றுப் பிழைப்பாய்க்கொண்ட மக்கள் நாளுக்கு நாள் வளர்த்து கொண்டுவருகின்றார்கள். அவர் களது தொல்லை அடி யோடு ஒழிந்தாலல்லாது சீர்திருத்தமோ, முன்னேற்றமோ சுலபமான காரியமாகுமா?
- தந்தை பெரியார், “குடிஅரசு” 9.8.1931
‘மணியோசை’
No comments:
Post a Comment