புதுடில்லி, அக். 9- பன்னாட்டு பொருளாதார உறவுகளுக் கான இந்திய ஆராய்ச்சி நிறு வனத்தின் ஜி20 மாநாட்டில், இந்திய ரிசர்வ் வங்கி முன் னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், கரோனா ஊரடங்கு மற்றும் பொருளாதார சரிவு காரண மாக சிறு நிறுவனங்கள் மற் றும் குடும்பங்களுக்கு ஏற்பட் டுள்ள பாதிப்புகளை மட்டுப் படுத்த, உடனடியான நிவா ரண உதவிகள் அளிக்க மத் திய அரசு பெரிய அளவில் செலவு செய்யத் தயங்கக் கூடாது என்று யோசனை தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தியா போன்ற வளரும் நாடுகள், கரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வர, அரசின் செலவுகளை அதிகரிக்க வேண்டும் என்று ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.
இதற்கிடையே பி.எச்.டி. வர்த்தக கூட்டமைப்பின் கூட்டத்தில் பேசிய மத்திய அரசின் பிரதான பொரு ளாதார ஆலோசகர் சஞ்சீவ் சன்யால், உரிய நேரத்தில் ஒரு நிதித் தொகுப்பு மூலம் அரசு செலவு செய்யும் என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment