பெரியார் கேட்கும் கேள்வி! (130) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 12, 2020

பெரியார் கேட்கும் கேள்வி! (130)


சுயராஜ்யக்காரர் 100க்கு 75 பேர்கள் இருப்பதாகக் கத்தலாம், கதர் கட்டலாம், கொடி பிடிக்கலாம், காந்திக் குல்லாய் போடலாம், தீண்டாமை விலக்குவதுதான் சுயராஜ்யத்தின் முதல் கொள்கை என்று சொல்லலாம், மகாத்மாவுக்கு ஜே! என்று கத்தலாம். சுயமரியாதை இயக்கம் தேசியத்திற்கு விரோதம் என்றும் சொல்ல லாம். ஆனால் பொதுக் கிணக்கில் ஒரு பறையன் வெள்ளிப் பாத் திரத்தில் தண்ணீர் மொள்ள ஒரு நான்கு பெயர்கள் சம்மதிப்பார்களா? தண்ணீர் மொண்டவனை உதைக்காமல் இருப்பார்களா? சுயராஜ் யம் என்பது வந்தால் மாத்திரம் ஜனங்களுக்குப் புத்தி மாறி விடுமா?


- தந்தை பெரியார், “குடிஅரசு” 9.8.1931


‘மணியோசை’


No comments:

Post a Comment