'சீர்திருத்தம்' என்பதைப்பற்றிப் பேசுவதில் யாருக்குச் சீர்திருத்தம்? எப்படிப்பட்ட சீர்திருத்தம்? எதற்காகச் சீர்திருத்தம்? எது சீர்திருத்தம்? அவற்றை எப்படி நிர்ணயிப்பது? அதற்கு முட்டுக்கட்டை எது? பிறகு அவற்றை எப்படி அமலுக்கு கொண்டு வருவது? என்பவைபோன்ற விஷயங்கள் சீர்திருத்தத்தலைப்பில் பேச வேண்டிய முக்கிய விஷயங்களாகும். அப்படிப் பார்த்தால் சீர்திருத்தம் இப்போது பேசுவது இந்திய மக்களுக்குத்தான் என்றும், அறிவுக்குட்பட்ட சீர்திருத்தம் என்றும், மனிதத் தன்மையும் சுதந் திரமும் அடைவதற்கு என்றும், உலக அக்கம் பக்கங்களை நோக்கி பகுத்தறிவுக்கு மதிப்புக் கொடுத்து உறுதியான மனதுடன் பழைமை யுடன் போராடி சீர்திருத்தமடைய வேண்டுமென்றும்தான் சொல்லக் கூடும். எவ்வித சீர்திருத்தத்திற்கும் பலவிரோதிகள் உண்டு. அவை பழைமை, முன்னோர்வாக்கு, மகான்வாக்கு, வேதத்தின் கட்டளை, சாஸ்திர சம்மதம், வெகுநாளாய் நடந்துவரும் பழக்கவழக்கம், நம் பியே ஒப்புக்கொண்டாக வேண்டியது என்பவைபோன்ற நிர்ப்பந் தம் முதலியவைகள் எல்லாம் சீர்திருத்தத்திற்கு முட்டுக்கட்டையும் விரோதமானவைகளல்லாது வேறு என்ன?
- தந்தை பெரியார், “குடிஅரசு” 9.8.1931
‘மணியோசை’
No comments:
Post a Comment