"தந்தை பெரியார் 142 பிறந்த நாள் மலர்" - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 27, 2020

"தந்தை பெரியார் 142 பிறந்த நாள் மலர்"

தமிழர் தலைவர், முத்தமிழ் அறிஞர் கலைஞர் உள்ளிட்ட தலைவர்கள், அறிஞர் பெருமக்களின் கருத்துகள் நிரம்பிய 21 கட்டுரைகள் ஒவ்வொன்றும் தந்தை பெரியாரை பல்வேறு கோணங்களில் அறிந்து கொள்ள உதவும். கட்டுரையினூடே, ஆங்காங்கே சில வரலாற்றுப் பதிவுகள் இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகளாக வந்துள்ளது கூடுதல் சிறப்பு.


மத்திய அரசு தற்போது கொண்டு வந்துள்ள தேசிய கல்விக் கொள்கை குறித்து கடுமையான கண்டனங்கள் வரும் சூழலில், ராஜாஜி கொண்டு வந்த குலக் கல்வித் திட்டத்தை எதிர்த்து 1954இல் தந்தை பெரியார் கூறிய கருத்து இந்த மலரில் இடம் பெற்றுள்ளது. இன்றைக்கும் பொருத்தப்பாடாக இருப்பதை நாம் பார்க்க முடிகிறது.


ஏப்ரல் மாதம் துவங்கி ஆகஸ்டு 31 வரை, இந்த கரோனா காலத்தில் தமிழர் தலைவர் கலந்து கொண்ட காணொலி நிகழ்ச்சிகள் 154 பிரமிப்பாக இருக்கிறது.


உலக அளவில் ஒரு சமூக இயக்கம், முழு ஊரடங்கு காலத்தில் தொழில் நுட்ப வசதியைப் பயன்படுத்தி, மக்களின் பிரச்சினைக்காக மக்களோடு தொடர்பு கொள்ளும் ஒரே இயக்கமாக திராவிடர் கழகமும் அதன் ஒப்பற்ற தலைவராக தமிழர் தலைவர் ஆற்றி வரும் பங்கும், ’என்ன செய்து கிழிக்கிறது’ கழகம் என்பவர்களுக்கு செவிளில் அறைந்தார் போல் கழக செயல்பாட்டை தேதி வாரியாக பிறந்த நாள் மலர் வெளிப்படுத்தியுள்ளது.


சமூக நீதி இடம் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி தந்தை பெரியார் அரசியல் நிர்ணயசபைக்கு எழுதிய கடிதம் பலருக்கு புதிய செய்தியாக இருக்கும்.


இன்றைய ஆட்சியாளர்களால் சமூக நீதிக்கும், மதச் சார்பின்மைக்கும் ஏற்பட்டுள்ள சவால்கள் குறித்து தமிழர் தலைவரின் கட்டுரை, இந்திய அளவில் ஒடுக்கப்பட்டோர் அனைவரையும் ஒருங்கிணைத்துக் களங்கள் காண வேண்டிய கட்டாயத்தை தெளிவாக உணர்த்துகிறது.


கரோனா தொற்று காலத்திலும் ஒன்றைச் சிறப்பாக செய்திட முடியும் என்பதற்கான சான்றாக "தந்தை பெரியார் 142 பிறந்த நாள் மலர்" விளங்குகிறது. இன்றைய தலைமுறையி னர் உள்ளிட்ட அனைவரும் படிக்க வேண்டியது மட்டுமல்ல. வரும் தலைமுறையினர்க்கும் சேமித்து தரப்பட வேண்டிய கருத்துப் பெட்டகம்.


- கோ.கருணாநிதி


No comments:

Post a Comment