கோவை மாநகர கழக பொறுப்பாளர்கள் சந்திப்பு கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 27, 2020

கோவை மாநகர கழக பொறுப்பாளர்கள் சந்திப்பு கூட்டம்


கோவை, அக். 27- கோவையில் மிக எழுச்சியோடு கழக பொறுப்பாளர்கள் சந்திப்பு கூட்டம் 25.10.2020 ஞாயிறு மாலை 4 மணி அளவில் புலியகுளம் வீரமணி அவர் களின் இல்லத்தில் நடை பெற்றது. மாநகர தலைவர் க.வீரமணி வரவேற்று உரை யாற்ற, மாவட்ட தலைவர் ம.சந்திரசேகர் தலைமை தாங் கினார். மாவட்ட செயலாளர் கழக செந்தில் நாதன், மண் டல செயலாளர் ச.சிற்றரசு, ஆகியோர் முன்னிலை வகித் தனர். நிகழ்வில் மே.பா.ரங்க சாமி, தமிழ் முரசு, பழ.அன்ப ரசு, திராவிடமணி, தமிழ் செல்வன், தோழர் சுரேஸ், கவி கிருஸ்னன், தருமலிங்கம், ஆட்டோ சக்தி, சுரேசன், ராமசாமி, திமுக சுப்பிரமணி யம் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.


விடுதலை சந்தா


கழக பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் அவர்கள் நவம்பர் 1ஆம் தேதி கோவை வருகையின் போது அதிக அளவில் விடுதலை சந் தாக்கள் திரட்டி தருவது என  முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தோழர் சகாயமேரி அவர்க ளின் நன்றியுரையோடு நிகழ்ச்சி நிறைவுபெற்றது.


No comments:

Post a Comment