தர்மபுரி, அக். 27- தர்மபுரியில் பெரியார் விடுதலை வாசகர் வட்ட துவக்க விழா 24.10.2020 சனிக்கிழமை மாலை 4 மணி அளவில் நடைபெற்றது. விடு தலை வாசகர் வட்டத் தலை வர் க.சின்னராஜ் தலைமை ஏற்று நடத்தினார். ம.சுதாமணி வரவேற்புரையாற்றினார்.
திராவிடர் கழக மாவட்ட தலைவர் வீ.சிவாஜி, மண்டல கழகத் தலைவர் அ.தமிழ்ச் செல்வன்ஆகியோர் முன் னிலை ஏற்றனர் .விடுதலை வாசகர் வட்டத்தை திராவி டர் கழக மாநில அமைப்பு செயலாளர் ஊமை.ஜெய ராமன் தொடங்கி வைத்தார். தொடங்கப்பட்ட முதல் வாசகர் வட்ட கருத்தரங்கம் விடுதலையால் ஏற்பட்ட மாற்றங்கள் என்னும் தலைப் பில் மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் கதிர்.செந்தில் விளக்க உரையாற் றினார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்: தர்மபுரி நகர தலைவர் கரு.பாலன், நகர அமைப்பாளர் மு.பரம சிவம், முன்னாள் மாவட்டச் செயலாளர் சி. காமராஜ், மக ளிரணி ஆசிரியர் சோபியா, மாவட்ட மாணவர் கழக துணை செயலாளர் அறிவுக் கரசு, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இறுதியாக பெரியார் புத்தக நிலைய உதவியாளர் மல்லிகா நன்றி கூறினார்.
No comments:
Post a Comment