பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் அவர்கள் வ.உ.சி. பற்றி குறிப்பிடுகின்றார்:
வ.உ.சி. குறித்த ஆய்வுகளில் உங்களின் பங்களிப்பு ஒரு புதிய கட்டத்தைக் குறிக் கிறது. ஆ. இரா. வேங்கடாசலபதியும் செய் திருக்கிறார். செக்கிழுத்த செம்மல் என்ற பட்டப்பெயரைத் தாண்டி, அவர் முன்னின்று நடத்திய முதல் அரசியல் வேலை நிறுத்தம், அவரது சிறை வாழ்க்கை, சிறையிலிருந்து வெளிவந்த பிறகான அவரது வாழ்க்கை எனப் பல பரிமாணங்களில் வ.உ.சி.யை நீங்கள் எடுத்துக் காட்டினீர்கள். வ.உ.சி. தமிழ்த் தேசியத்தில் காலூன்றிக் கொண்டு தான் இந்திய தேசியத்தைப் பார்த்தார், அரசியல் விடுதலையையும், சமூக விடுதலை யையும் இணைத்தார் போன்ற கருத்துகளை யெல்லாம் அந்நூலில் விவாதித்துள்ளீர்கள். அதே நூலில் காந்தியின் சாத்துவீகக் கருத் துகளோடு வ.உ.சி.யால் ஒத்துப்போக முடிய வில்லை என்று எழுதியுள்ளீர்கள். இந்த வேறுபாடு எங்கேனும் பதிவாகியிருக்கிறதா? இதனை விளக்குவீர்களா?
தூத்துக்குடியைச் சேர்ந்த பெ.நா. கந்த சாமிப் பிள்ளை என்ற விடுதலைப் போராட்ட வீரர் அழுத்தமான காந்தியவாதி. அவர் வ.உ. சி.யின் காலத்திலேயே “அவிந்த நெருப்பு” என்று ஒரு சிறு நூலை எழுதியிருக்கிறார். அந்த நூல் இன்னும் எனக்குக் கிடைக்க வில்லை. வ.உ.சி. காந்தியிடமிருந்து வேறு பட்டதால் வ.உ.சி.யைக் கடுமையாக விமர்சித் துள்ளார். ஜீவாவின் வாழ்க்கை வரலாற்றிலும் காந்தியின் ராட்டை குறித்த வ.உ.சி.யின் கடுமையான விமர்சனம் பதிவாகியுள்ளது. இறுதிவரை சுதேசி என்ற அடைமொழியில் அழைக்கப்படுவதைத்தான் விரும்பியுள் ளார். கதர் அணிவதை அவர் ஏற்றுக்கொள்ள வில்லை. கைத்தறி ஆடைகளையே அணிந் திருக்கிறார்.
அன்றைய காங்கிரசின் பிராமணியத் தலைமை வ.உ.சி.யை நிராகரித்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். உண்மையா?
காங்கிரசுக்குள் பிராமணர் / அல்லாதார் என்ற அணிகள் அன்று உருவாகியிருந்தன. வ.உ.சி., திரிகூடசுந்தரம் பிள்ளை, வரதராசுலு நாயுடு, திரு.வி.க. போன்றோர் பிராமணர் அல்லாதார் அணியிலிருந்தனர். வ.உ.சி. பிராமணர்களை நோக்கி, “பிறப்பு முதல் இறப்பு வரை இந்துக்களின் வாழ்க்கையை, சடங்குகளாலேயே நிரப்பி விடுகிறீர்கள். இப்போது நாங்கள் விழித்துக் கொண்டோம்'' என்றெல்லாம் எழுதுகிறார். இது “எனது அரசியல் பெருஞ்சொல்” என்ற அவரது குறு நூலில் பதிவாகியுள்ளது. “பிராமணர் அல்லா தார் எனும்போது முகம்மதியர், கிறித்தவர், தாழ்த்தப்பட்ட இந்துக்கள், தாழ்த்துகின்ற இந்துக்கள் என்ற நான்கு வகையினரைக் குறிக்கின்றேன்'' என்று கூட வ.உ.சி. எழுதி யுள்ளார். இது வ.உ.சி. 1927இல் எழுதியது. பிராமணரல்லாதார் என்ற சொல்லுக்குள் தாழ்த்துகின்ற இந்துக்கள் உள்ளனர் என்று வ.உ.சி. கூறுவது அவரது தெளிவான பார் வையை எடுத்துக் காட்டுகிறது. காங்கிரசில் இருந்து கொண்டு கம்யூனல் அவார்டை ஆதரித்த காங்கிரஸ்காரர் வ.உ.சி.
காங்கிரஸ் அரசியலில் தீவிரவாதி என அறியப்பட்டுள்ள திலகர், சமூக விஷயங் களில் பழைமைவாதியாக இருந்தார். இத னைத் தெளிவான சான்றுகளுடன் அம்பேத் கர் எடுத்துக்காட்டியுள்ளதை என் நூலில் குறிப்பிட்டுள்ளேன். வ.உ.சி. இந்த விஷயத் தில் திலகரிடமிருந்து வேறுபட்டார்.
வ.உ.சி.யின் பெயரால் கல்வி நிறுவனங் களை நிறுவிய திரு.ஏ.பி.சி. வீரபாகு வாழ்வில் நிகழ்ந்த நிகழ்ச்சி ஒன்றை அவரது நெருங்கிய நண்பர் வாயிலாகக் கேள்விப்பட்டேன். பின்னர் கிறித்தவர் ஒருவரும் தமது நூலில் இதனைப் பதிவு செய்துள்ளதைப் படித்தேன். அப்போது திரு.வீரபாகு அவர்கள் சிறீவை குண்டம் எம்.எல்.ஏ.வாக இருந்தார். அந்தத் தொகுதியில் ஒரு கிராமத்தில் இந்துக்கள் நிலங்களைக் கிறித்தவர் ஆக்கிரமித்து கோயில் கட்டிக் கொண்டதாக ஒரு பிரச் சினை உருவானது. உண்மையில் அது அவ்வாறு இல்லை. வீரபாகு அவர்களுக்கு அந்தக் கிராமத்தில் ஒரு வரவேற்புக் கூட்டம் நடத்தினார்கள். அந்தக் கூட்டத்தில் வீரபாகு அவர்கள் இந்துக்களின் கூற்றை விமர்சனம் செய்து பேசினார். அதுபற்றி அவரிடம் அவரது நண்பர்கள் கேட்டபோது, அவர் சொன்ன பதில் இதுதான், “நான் வ.உ.சி.யின் பெயரால் கல்லூரி நடத்தி வருகிறேன். வெறும் சம்பிரதாயமாக இதனை நான் செய்து வரவில்லை. வ.உ.சி. சைவராக மட்டும் வாழ்ந்தவரல்லர், சிறுபான்மையினர் நலன்களைப் பாதுகாப்பதில் அவருக்கு அக்கறை இருந்தது.”
1913லிருந்து 1930இல் வ.உ.சி.யின் மறைவு வரையிலான அவரது வாழ்க்கை விரிவாகப் பேசப்படுவதில்லை. அக்காலம் பற்றிச் சொல்லுவீர்களா?
இக்காலக்கட்டத்தில் வ.உ.சி. பொருளாதார நலிவுக்கு ஆளாகி வாழ்க்கைப் போராட் டத்தை நடத்திக் கொண்டிருந்தார். அதே நேரத்தில் தொழிற்சங்கப் பணிகளையும் செய்துள்ளார். அவருடைய சமூக சீர்திருத்த உணர்வுகள் வெளிப்பட்ட காலம் இதுதான். அவருடைய எழுத்துப் பணிகளும் இதே காலத்தில்தான் நிகழ்ந்துள்ளன. தமிழ் மொழியின் மீது ஆழ்ந்த பற்றும், தமிழில் ஆழ்ந்த செம்மையும் கொண்டவர் என்பதை அவரது இக்காலத்திய செயல்பாடுகள் உறுதி செய்கின்றன.
வ.உ.சி. ஆய்வுகள் தொடருகின்றனவா?
வ.உ.சி. ஆய்வுகள் பல கட்டங்களைக் கடந்து வந்துள்ளன. ம.பொ.சி. ஒரு காலத்தில் வ.உ.சி. குறித்து ஜனரஞ்சக வடிவில் எழு தினார். ஆனால் அது மிகவும் முக்கியமானது. அவரது நூலுக்குப் பின்பே வ.உ.சி. பற்றிய அறிமுகம் தமிழ்நாட்டில் பரவலானது என்பதை மறுக்க முடியாது. அதன் பின்னர் பாரதி ஆய்வாளர்களான ரா.அ.பத்மநாபன், பெ.சு.மணி ஆகியோர் குறிப்பிடத்தக்க ஆய் வுகளைச் செய்துள்ளனர். ஆ.இரா.வேங்கடா சலபதி வெளிவராத வ.உ.சி.யின் எழுத்து களைச் சேகரித்து சில நல்ல ஆய்வுகளைச் செய்துள்ளார். பேராசிரியர் வீ.அரசு, வ.உ.சி. யின் 13 நூல்களைத் தொகுத்து ஒரு பெரிய நூலாக வெளியிட்டுள்ளார். அவை எல் லாமே வ.உ.சி. சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு 1913லிருந்து 1936 வரை எழுதி யவை. வரலாற்றுப் பேராசிரியர் ராஜேந்திரன் சுதேசி இயக்கம் குறித்த தமது ஆய்வேட்டில் வ.உ.சி.யின் பங்கை மிக அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment