7.5% உள்ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் தர ஆளுநர் தாமதம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 30, 2020

7.5% உள்ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் தர ஆளுநர் தாமதம்

அரசாணை வெளியிட்டது தமிழக அரசு



சென்னை, அக். 30- தமிழக அரசுப் பள்ளி களில் படித்த மாணவ-- மாணவிகளுக்கு மருத்துவ கல்லூரியில் சேர 7.5. சதவீத உள்இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட முன்வடிவுக்கு தமிழக ஆளுநர் அனுமதிதர காலதாமதம் செய்வதால், அரசாணையை தமிழக அரசு நேற்று (29.10.2020) மாலை வெளியிட்டது.


அந்த அரசாணையில் கூறி இருப்பதா வது:  தமிழக அரசு பள்ளிகள், மாநக ராட்சிப் பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், தாழ்த்தப்பட்ட-பழங்குடியினர் நல பள்ளிகள், கள்ளர் சீர்மரபினர் பள்ளி கள், வனத்துறை பள்ளிகள் ஆகியவற்றில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்து நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கும் ஒரு சிறப்பு சட்டத்தை இயற்ற வகை செய்வதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் அரசு ஒரு ஆணையம் அமைத்தது.


அந்த ஆணையம் விரிவாக ஆய்வு செய்தது. அதன் அடிப்படையில் அனைத்து மருத்துவக் கல்லூரி நிறுவனங்களிலும் மாணவர் சேர்க்கையில் ஒரேவிதமான சேர்க்கை நடத்தப்பட வேண்டும். அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பொருளாதாரத்தில் மிக குறைந்த நிலையில் உள்ளனர். இவர்களுக்கு மருத் துவக் கல்லூரிகளில் இடம் கிடைப்பது கடினமாக இருந்தது. அறிவாற்றல் அதி கமாக இருந்தாலும் சமூக பொருளாதார அடிப்படையிலும், பெற்றோர் கல்வி அறிவு இல்லாதவர்களாகவும் உள்ள நிலையில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் தரத்தை உயர்த்துவது அரசின் கடமையாகும்.


நீட் தேர்வில் வெற்றிபெற்று இருந் தாலும், தனியார் பள்ளி மாணவர்க ளுக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக் குமான மதிப்பெண் வேறுபாடு அதிக மாக உள்ளது. இதனால் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று ஆணையம் அரசுக்கு பரிந்துரை செய்தது. அதன்படி, 6ஆம் வகுப்பில் இருந்து 12ஆம் வகுப்பு வரை மாநில அரசு பள்ளிகளில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு எம்பிபிஎஸ் சேர்க்கையில் 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று ஆணையம் பரிந்துரை செய்திருந்தது. அதன் அடிப்படையில் தமிழக அமைச் சரவை கூட்டத்தில் ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்பட்டு, தமிழகத் தில் எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்த மாணவ - மாணவிகளுக்கு 7.5 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டும் என்று முடிவு செய் யப்பட்டது.


சமமான மாணவர் சேர்க்கை நடத்தப் பட வேண்டும் என்ற பரிந்துரை அடிப் படையில் சிறப்பு சட்டத்தை இயற்றவும் அரசு முடிவு செய்தது. அதன்படி, நீட் தேர்வில் வெற்றிபெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு 2019-2020ஆம் கல்வி யாண்டில் எம்பிபிஎஸ் படிப்பில் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்களிலும் மாண வர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இதற்கான தமிழக அரசாணையை பிறப்பித்துள்ளது. இவ் வாறு அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.  இந்த அரசாணையால் மருத்துவப் படிப் புகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் 300 பேருக்கு இந்த ஆண்டே இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.


No comments:

Post a Comment