தூத்துக்குடி, அக். 30- தூத்துக்குடி சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகில் 26.10.2020 அன்று மாலை மனு நூலை தடை செய்ய வலியுறுத்தியும் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்க ளுக்கு ஆதரவாகவும் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தை, மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம், மக்கள் அதிகாரம்,புரட்சிகர இளைஞர் முன்னணி ஆகிய இயக்கங்களின் பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கழகத்தின் சார்பில் நெல்லை மண்டலத் தலைவர் மா.பால்ராசேந் திரம், மாவட்டச் செயலாளர் மு.முனியசாமி, மாவட்ட துணைச் செயலாளர் இரா.ஆழ்வார், பெரியார் மய்ய பொறுப்பாளர் சு.காசி, காப்பாளர் போசு, திருவை ஒன்றிய செயலாளர் திருமலை குமரேசன், சொ.பொன்ராசு, கலைச்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் கைது செய்யப் பட்டனர். கைது செய்யப்பட்ட தோழர்கள் மத்தியில் மா.பால் ராசேந்திரம், சு.காசி, சிசுஜித், செல்வம், விசிக மாவட்டத் தலைவர் ஆகியோர் உரையாற்றினர்.இரவு 8.30 மனிக்கு அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
No comments:
Post a Comment