5ஆம் கட்ட ஊரடங்கு தளர்வு நவம்பர் 30 வரை நீட்டிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 28, 2020

5ஆம் கட்ட ஊரடங்கு தளர்வு நவம்பர் 30 வரை நீட்டிப்பு

மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு


புதுடில்லி,அக்.28, கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட அய்ந்தாம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் அடுத்த மாதம் 30ஆம் தேதி வரை நீட்டிக் கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இம் மாதம் புதிதாக எந்த தளர்வுகளும் அறிவிக்கப்படவில்லை.


கரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ஆம் தேதி தேசிய ஊரடங்கை மத்திய அரசு அமல்படுத்தியது. சுமார் 2 மாத ஊரடங்குக்குப் பிறகு, ஜூன் மாதத்தில் இருந்து ஒவ்வொரு மாதத்தின் இறுதியில், படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்படுகின்றன. அதன்படி, கடந்த செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி 5ஆம் கட்ட ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட் டது. அதில், அக்டோபர் 15ஆம் தேதி முதல் 50 விழுக்காட்டளவு பார்வையாளர்களுடன் திரையரங் குகள் திறக்க அனுமதிக்கப்பட்டது. இதே போல, பல்வேறு கட்டுப் பாடுகளுடன் பள்ளிகள் திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டது. ஆனா லும், பள்ளிகள், தியேட்டர்கள் திறப்பது குறித்து அந்தந்த மாநில, யூனியன் பிரதேச அரசுகள் முடி வெடுக்கலாம் என மத்திய அரசு அறிவித்தது. இதன்படி, பல மாநி லங்களில் கடந்த 15ஆம் தேதியி லிருந்து திரையரங்குகள், பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.


மத்திய வெளியுறவு அமைச்சகம் அனுமதியின்கீழ், சர்வதேச விமா னப் பயணங்களும் தொடங்கப்பட் டுள்ளன. வர்த்தக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்டவைகளுக்கான கட்டுப்பாடுகள் பெருமளவில் நீக்கப் பட்டுள்ளது. 5ஆம் கட்ட ஊரடங்கு தளர்வு வரும் 31ஆம் தேதியுடன் நிறைவடைய இருக்கும் நிலையில், 6ஆம் கட்ட ஊரடங்கு தளர்வில் மேலும் சில தளர்வுகள் வழங்கப்பட லாம் என எதிர் பார்க்கப்பட்டது. குறிப்பாக, புற நகர் மின்சார ரயில்கள் இயக்கப் படுவது குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது.  இந்நிலை யில், 5ஆம் கட்ட ஊரடங்கு தளர் வுகள் வரும் நவம்பர் 30ஆம் தேதி வரை நீட் டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று (27.10.2020) அறிவித்தது. 5ஆம் கட்ட ஊரடங்கு தளர்வில் என்னென்ன தளர்வுகள் வழங்கப்பட்டதோ அவை அப் படியே தொடரும் என கூறியுள்ளது. குறிப்பாக, மெட்ரோ ரயில் சேவை, கோயில்களில் பக்தர் களுக்கு அனுமதி, தியேட்டர்கள் செயல்பட அனுமதி, பள்ளிகள் திறப்பு, உணவகங்கள் செயல்பட அனுமதி போன்றவற்றில் 5ஆம் கட்ட ஊரடங்கு தளர்வில் விதிக்கப் பட்ட கட்டுப்பாடுகள் நவம்பர் 30ஆம் தேதி வரை தொடரும் என தெரி விக்கப்பட்டுள்ளது.


அதே போல, நோய் தொற்று அதிகமுள்ள கட்டுப்பாட்டு பகுதி களில் எந்த வித தளர்வுகளும் இன்றி ஊரடங்கு கடுமையாக பின்பற்றப் படும் என்றும் உள்துறை அமைச் சகம் தெரிவித்துள்ளது. மாநிலங் களுக்கு இடையேயும், மாவட்டங் களுக்கு இடையேயும் மக்கள், வாகனங்கள் சென்றுவர எந்த வித இ-பாஸ் அல்லது அனுமதி தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இந்த தளர்வுகள் குறித்து மாநில அரசு, அந்தந்தப் பகுதிகளின் நிலவரத்தை பொறுத்து முடிவு எடுக்கவும் மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.


No comments:

Post a Comment