சென்னை, அக். 12- கரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் இறுதியில் கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டது.
இதையடுத்து, காய்கறிச் சந்தை திருமழிசையிலும், மாதவரத்தில் பழ மார்க் கெட்டும், வானகரத்தில் பூ மார்க்கெட்டும் செயல்பட்டு வந்தன. ஊரடங்கு தளர்வுக்கு பின்னர், செப்டம்பர் 28ஆம் தேதி கோயம்பேடு மார்க் கெட் மீண்டும் திறக்கப்பட் டது. முதல்கட்டமாக 200 மொத்த வணிகக் கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப் பட்டது. மேலும், காய்கறி வாங்க வரும் சில்லறை வியா பாரிகள் நள்ளிரவு 12 மணி முதல் காலை 9 மணிவரை காய்கறிகளை வாங்கி செல்ல அனுமதிக்கப்பட்டனர். பொதுமக்கள் நேரடியாக காய்கறி வாங்க தடை விதிக் கப்பட்டது. மேலும் சில்லறை வியாபாரிகள் மார்க்கெட்டுக் குள் ஆட்டோ, பைக், மினி சரக்கு வேன் கொண்டு செல் வதற்கும் தடை விதிக்கப்பட் டது.
கோயம்பேடு மார்க்கெட் டுக்கு வரும் வியாபாரிகள் கடும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி வாங்க வந்த சில்லறை வியாபாரிகள், மொத்த வியா பாரிகள் சுமார் 2 ஆயிரத்து 700 பேருக்கு பரிசோதனை செய்ததில், சென்னை, திருவள் ளூர், காஞ்சி, செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த 50 வியாபாரிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட் டது.
No comments:
Post a Comment