உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சிறப்பு மருத்துவப் படிப்பு சேர்க்கையில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவிகித ஒதுக்கீடு கோரி வழக்கு தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 11, 2020

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சிறப்பு மருத்துவப் படிப்பு சேர்க்கையில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவிகித ஒதுக்கீடு கோரி வழக்கு தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, அக். 11- உச்ச நீதி மன்ற உத்தரவுப்படி சிறப்பு மருத்துவப் படிப்பு சேர்க்கையில், 50 சதவீத இடங்களை அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
.
இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் அரசு மருத்து வர்கள் எம்.செய்யது பக்ரூதீன், ஜி.குமரவேல் உள்ளிட்ட பலர் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது:


உச்ச நீதிமன்ற உத்தரவுப் படி நடப்புக் கல்வி ஆண்டில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி எனப் படும் சிறப்பு மருத்துவ முது நிலை மற்றும் டிப்ளமா படிப்பு சேர்க்கையில் 50 சதவீத இடங்களை அரசுப் பணியில் உள்ள மருத்துவர் களுக்கு ஒதுக்க உத்தரவிட வேண்டும். அதன்பிறகே இப்படிப்புகளுக்கான முதல்கட்ட ஆன்லைன் கலந்தாய்வை தொடங்குமாறு தமிழக அர சுக்கு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கோரியிருந்தனர்.


நீதிபதி என்.ஆனந்த் வெங் கடேஷ் முன்பு இந்த வழக்கு விசாரணை நடந்தது.
அப்போது, மனுதாரர்கள் தரப்பில் வழக்குரைஞர் ஜி.சங்கரன் ஆஜராகி, அரசுப் பணியில் உள்ள மருத்துவர் களுக்கு மருத்துவ முதுநிலை, டிப்ளமா சிறப்பு படிப்புகளில் உரிய இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது. 


அதன் அடிப் படையில், இப்படிப்புகளில் 50 சதவீத இடங்களை அரசுப் பணியில் உள்ள மருத்துவர்க ளுக்கு ஒதுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார்.


அரசு தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண் ஆஜராகி, இதுதொடர்பாக நடக்க இருந்த ஆன்லைன் கலந்தாய்வு, மறு உத்தரவு பிறப்பிக் கும்வரை தள்ளிவைக்கப்பட் டுள்ளது. தற்போது இந்த வழக்கில் அரசின் நிலைப்பாடு என்ன என்று விரைவில் கேட்டு தெரிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.


இதையடுத்து, தமிழக அரசு பதில் அளிக்க உத்தர விட்டுள்ள நீதிபதி, விசார ணையை வரும் 16ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.


No comments:

Post a Comment