உள்துறை அமைச்சருக்கு டி.ஆர்.பாலு கடிதம்
சென்னை, அக். 27- மருத்துவப் படிப்பு களில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும்படி தமிழக ஆளு நருக்கு வழிகாட்ட வேண் டும் என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார்.
'நீட்' தேர்வால் பாதிக்கப்பட்ட அர சுப் பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவப் படிப்புகளில் 7.5 சதவீத முன்னுரிமை ஒதுக்கீடு வழங்குவதற்கான தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவுக்கு தமிழக ஆளுநர் மேலும் காலம் தாழ்த்தாமல் உடன டியாக ஒப்புதல் வழங்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வழிகாட்டுதல் வழங்க வேண்டும் என வலியுறுத்தி திமுகவின் நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தனித்தனியாக 27.10.2020 அன்று கடிதம் எழுதியுள்ளனர்.
அதன்படி, நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி., மத் திய உள்துறை அமைச்சருக்கு எழுதி யுள்ள கடிதம்:
"கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்கள், மருத்துவக் கல்வி பெறு வதற்கும், பெருமை மிக்க இந்த நாட்டின் எதிர்கால மருத்துவர்களாக வருவதற் கான கனவை நனவாவதற்கும், தடையாக உள்ள நீட் தேர்வை ரத்து செய்ய வேண் டும் எனத் திமுக வலியுறுத்தி வருவதை, உள்துறை அமைச்சராகிய தாங்கள் நன்கு அறிவீர்கள் என நம்புகிறேன்.
மறுபுறம், 2017 - 2018 கல்வியாண்டு முதல் நீட் தேர்வு, அரசுப் பள்ளி மாணவர்களிடம் ஏற்படுத்தி வரும் தாக்கத்தை ஆராய்வதற்காக முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி கலையரசன் உள்ளிட்ட மூத்த வல்லுநர்கள் அடங்கிய கமிட்டியை தமிழ்நாடு அரசு உருவாக் கியது.
அந்தக் கமிட்டியின் பரிந்துரைகளைத் தொடர்ந்து 'மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி படிப்புகளுக்கான தகுதித் தேர்வாகக் கருதப்படும் தேசியத் தகுதி (நுழைவுத் தேர்வில் (நீட்) வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது' என்று மாநில அரசு முடி வெடுத்தது, அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களிடையே சமத்துவத் தைக் கொண்டுவருவதற்கான நியாய மான செயலாகும்.
மேற்கண்ட முடிவின் அடிப்படை யில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான 'மருத் துவம், பல் மருத்துவம், இந்திய மருத்து வம் மற்றும் ஓமியோபதி இளங்கலைப் படிப்புகளில் சேர அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முன் னுரிமை வழங்கும் தமிழ்நாடு மசோதா 2020', 15.09.2020 அன்று தமிழ்நாடு சட்டப்பேர வையில் ஒருமனதாக நிறை வேற்றப்பட்டு ஆளு நரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
16.10.2020 அன்று நீட் தேர்வு அறிவிக் கப்பட்டதன் அடிப்படையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அரசுப் பள்ளி மாணவர்கள் இந்த ஆண்டிலேயே இட ஒதுக்கீட்டின் பலனை அடையும்படியாக மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக ஆளுநருக்கு 21.10.2020 அன்று கடிதம் எழுதினார்.
ஆனால், வியப்பளிக்கும் வகையில், ஆளுநர் எழுதிய 22.10.2020 தேதியிட்ட கடிதத்தில், அதுகுறித்து முடிவெடுக்க மேலும் மூன்றிலிருந்து நான்கு வாரகால அவகாசம் தேவைப்படுவதாகக் குறிப் பிட்டிருந்தார். அது தமிழ்நாடு சட்டப் பேரவையின் மாண்புக்கும், கூட்டாட்சித் தத்துவத்திற்கும் எதிரானதாக இருப்ப தால் திமுக அமைதியாகவும் ஜனநாயக வழியிலும் 24.10.2020 அன்று ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் நடத் தியது.
அப்போது, மு.க.ஸ்டாலின் மேலும் காலதாமதமின்றி மசோதாவுக்கு ஒப்பு தல் அளிக்க வேண்டுமென ஆளுநரை வலியுறுத்தினார். ஏற்கெனவே நீட் தேர்வு உண்டாக்கியிருக்கும் காயத் தோடு, தற்போது மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வுத் தேதிகள் அறிவிக்கப்பட்டு சேர்க்கை நடைமுறை கள் தொடங்கிவிட்டன.
எனவே, மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குவதில் இன்னமும் கால தாமதம் செய்வது மருத்துவக் கல்வியைக் கற்க விரும்பும் அரசுப் பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்குவதோடு, இந்தக் கல்வியாண்டைப் பொறுத்த வரையில் அந்த மசோதாவின் நோக்கம் பயனற்றதாகிவிடும்.
மேற்சொன்ன காரணத்தினாலும், தலைவர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்த லின்படியும், மருத்துவத் துறையைத் தங்கள் தொழிலாக அமைத்துக் கொள் ளும் அரசுப் பள்ளி மாணவர்களின் கனவினை இந்த ஆண்டிலேயே நிறை வேற்றும்படியாக 'மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இளங்கலைப் படிப்புகளில் சேர அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் தமிழ்நாடு மசோதா 2020'-க்கு ஒப்புதல் அளிக்கும் படி தமிழக ஆளுநருக்கு மத்திய உள் துறை அமைச்சர் வழிகாட்ட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்".
இவ்வாறு டி.ஆர்.பாலு தெரிவித்து உள்ளார்.
No comments:
Post a Comment