உச்சநீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி, அக். 28- ஹத்ராஸ் இளம்பெண் பாலியல் வன் முறை, கொலை வழக்கு விசாரணையை அலகாபாத் உயர்நீதிமன்ற கண் காணிப்பின்கீழ் நடத்தும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராசில் நடந்த தாழ்த்தப்பட்ட இளம்பெண் பாலியல் பலாத்காரம், கொலை சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் பற்றி சிபிஅய் விசா ரித்து வருகிறது. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு பொதுநலன் மனுக்களில், ‘ஹத்ராஸ் விவகாரம் பற்றி உச்சநீதி மன்றத்தின் கண்காணிப்பில் நடத்தப்பட வேண்டும். அப்போதுதான், இச்சம்பவத்தில் நடந்த உண்மைகள் வெளிப்படையாக தெரியவரும். மேலும், இந்த வழக்கு விசார ணையை டில்லிக்கு மாற்ற உத்தரவிட வேண்டும்,’ என கூறப்பட்டு உள்ளது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் அண்மையில் ஒத்தி வைத்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் போபண்ணா, இராமசுப்ரமணியன் அமர்வு நேற்று (27.10.2020) தீர்ப்பை வழங்கியது. அதில், ‘இந்த சம்பவம் பற்றி சிபிஅய் விசாரித்து வருகிறது. விசாரணையின் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப் பட்டுள்ளது. அதனால், உச்சநீதிமன்றம் இதனை கண்காணிக்கத் தேவை யில்லை. இந்த வழக்கு, விசாரணை உள்ளிட்ட அனைத்து அம்சங்களை யும் இனிமேல் அலகாபாத் உயர்நீதிமன்றம் கண்காணிக்க உத்தரவிடப் படுகிறது. இந்த வழக்குகள் இத்துடன் முடிக்கப்படுகிறது,’ என உத்தர விட்டனர்.
ஊரடங்கில் வசூலித்த வட்டிக்கு வட்டி தொகையை நவ.5க்குள் வழங்க வேண்டும்
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு
புதுடில்லி, அக். 28- கரோனா ஊரடங்கு காலத்தில் மக்களிடம் வசூலிக்கப் பட்ட 6 மாத கடன் தவணைகளுக்கான வட்டிக்கு வட்டி தொகையை, நவம்பர் 5ஆம் தேதிக்குள் திருப்பி கொடுக்கும்படி வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி (ஆர்பிஅய் உத்தர விட்டுள்ளது.
வங்கிகள், நிதி நிறுவனங்களில் மக்கள் வாங்கிய கடனுக்கான மாதத் தவணையை திருப்பி செலுத்துவதில் இருந்து, கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் முதல் ஆகஸ்ட் 31 வரையிலான 6 மாதங்களுக்கு மத்திய அரசு விலக்கு அளித்தது. ஆனால், இந்த தவணைக்காக மக்களிடம் வங்கிகள், நிதி நிறுவனங்கள் வட்டிக்கு வட்டி வசூலித்தன. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், ரூ.2 கோடி வரையிலான அனைத்து கடன்களுக்குமான 6 மாத தவணைக்கு வட்டிக்கு வட்டி ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.
மேலும், ஊரடங்கு காலத்தில் தவணையை முறையாக திருப்பி செலுத்தியவர்களுக்கும் வட்டிக்கு வட்டி தொகைக்கு இணையான தொகை திருப்பி அளிக்கப்படும் என்றும் அறிவித்தது. இந்நிலையில், அனைத்து வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி நேற்று (27.10.2020) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், ‘வங்கி களில் ரூ.2 கோடிக்கு மிகாமல் கடன் பெற்ற அனைவருக்கும் கடன் மீது வசூலிக்கப்பட்ட 6 மாதங்களுக்கான வட்டிக்கு வட்டி தொகையை உடனடியாக திருப்பி கொடுக்க வேண்டும். நவம்பர் 5ஆம் தேதிக்குள் இத்தொகையை வழங்கி முடிக்க வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment