ரயில்வேயிடம் குறைந்தபட்ச மின் கட்டணம் வசூலிக்க வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 27, 2020

ரயில்வேயிடம் குறைந்தபட்ச மின் கட்டணம் வசூலிக்க வேண்டும்

மின்சார கழகத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு


சென்னை,அக்.27, கரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் மார்ச் கடைசி வாரம் முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்த காலக்கட் டத்தில் ரயில்கள், பேருந்துகள் என பொதுப்போக்குவரத்து இயங்க வில்லை. இந்த நிலையில் உயர் அழுத்த மின் கட்டணத்தை முழு மையாக செலுத்தும்படி தெற்கு ரயில்வே நிர்வாகத்தை தமிழ்நாடு மின்சாரம் உற்பத்தி மற்றும் பகிர் மான கழகம் அறிவுறுத்தி உள்ளது. அதாவது, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட 8 மாவட்ட மின்சாரம் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சூப்பிரண்டுகள், உயர் அழுத்த மின் கட்டணம் செலுத்த தெற்கு ரயில்வே நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளனர்.


இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தெற்கு ரயில்வே நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. அதில், ‘ஊரடங்கு நேரத்தில் ரெயில்கள் இயக்கப்படவில்லை. எனவே, குறைந்தபட்ச கட்டணமான 20 சதவீதத்தை வசூலிக்க மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.


இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்தவெங்கடேஷ், “இதே கோரிக்கையுடன் ஸ்பின்னிங் மில் உரிமையாளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கை விசாரித்த இந்த உயர்நீதிமன்றம், ஊரடங்கு முடியும் வரை குறைந்தபட்ச கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்று கடந்த ஆகஸ்டு 14ஆம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவு இந்த வழக்கிற்கும் பொருந்தும். தெற்கு ரெயில்வே நிர்வாகத்திடம் இருந்து, குறைந்த பட்ச கட்டணமே வசூலிக்க வேண் டும்'' என்று உத்தரவிட்டார்.


No comments:

Post a Comment