ராகுல்காந்தி யோசனை
புதுடெல்லி, அக்.27 பிரதமர் மோடி உடனடி யாக விவசாயிகளை அணுகி, அவர்களது பிரச்சினைகளை கேட்டு ஆறுதல்படுத்த வேண் டும் என காங்கிரஸ் முன் னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, நேற்று (26.10.2020) தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிரதமர் மோடியின் உருவபொம்மையை பஞ்சாப் விவசாயிகள் எரித்தது தொடர்பான செய்தியை வெளியிட்டு இருந்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
பஞ்சாப் முழுவதும் உருவ பொம்மை எரிப்பு நடந் துள்ளது. பிரதமர் மீது பஞ்சாப் இப்படி கோபத்தை காட் டுவது துயரமானது. இது, ஆபத்தான முன்மாதிரி மட்டுமின்றி, நாட்டுக்கு மோசமான சம்பவம் ஆகும். ஆகவே, பிரதமர் உடனடியாக விவசாயிகளை அணுகி, அவர்களது பிரச்சினைகளை கேட்டு ஆறுதல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ராமேசுவரம் மீனவர்கள்மீது இலங்கை கடற்படை தாக்குதல்
ராமேசுவரம், அக்.27 கச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்கள் மீது கற்கள், பாட்டில்களை வீசி இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதும் விரட்டியடிப்பதும் கைது செய்வதும் வாடிக்கையாக நடந்து வருகிறது.
இந்நிலையில் கச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்கள் மீது கற்கள், பாட்டில்களை வீசி இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் மீனவர்களின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் மீனவர்கள் கரை திரும்பி உள்ளனர். பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மீன்பிடி சாதனங்களையும் இலங்கை கடற்படை சேதப்படுத்தி உள்ளதாக மீனவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
இலங்கை கடற்படை அட்டூழியத்தால் சுமார் 3 ஆயிரம் மீனவர்கள் பெரும் நஷ்டத்துடன் கரை திரும்பினர்.
தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்படும் வரை மக்கள் யாரும் நகரை விட்டு வெளியேறக்கூடாது
சீனா நாட்டில் உத்தரவு
பெய்ஜிங், அக்.27, சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள ஜின்ஜியாங் மாகாணம் காஷ்கர் நகரில் ஆடை தொழிற்சாலையில் வேலை பார்க்கும் இளம்பெண் ஒருவருக்கு கடந்த சனிக்கிழமை அறிகுறிகளே இல்லாமல் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அந்த இளம் பெண்ணுடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதனை செய்ததில் 137 பேருக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதை தொடர்ந்து காஷ்கர் நகரின் மொத்த மக்கள் தொகையான 47 லட்சம் பேருக்கும் 3 நாட்களில் கரோனா பரிசோதனை செய்ய மாகாண அரசு முடிவு செய்தது. இதற்காக நகரம் முழுவதும் பல்வேறு இடங்களில் கரோனா பரிசோதனை மய்யங்கள் திறக்கப்பட்டு இரவு, பகலாக பரிசோதனை நடந்து வருகிறது.
நேற்று முன்தினம் மதியம் வரை 28 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அனைவருக்கும் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் சீன நாட்டின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
எஞ்சிய 19 லட்சம் பேருக்கும் நாளைக்குள் கரோனா பரிசோதனை நடத்தி முடிக்கப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்கர் நகரில் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்படும் வரை மக்கள் யாரும் நகரை விட்டு வெளியேறக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த மாத தொடக்கத்தில் சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள துறைமுக நகரமான கிங்டா வோவில் புதிதாக 6 பேருக்கு கரோனா உறுதி செய்யப் பட்டதை தொடர்ந்து 5 நாட்களில் 90 லட்சம் பேருக்கு பரிசோதனை நடத்தி முடிக்கப்பட்டது நினைவு கூரத்தக்கது.
உலக அளவில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.37 கோடியாக உயர்வு
ஜெனீவா, அக்.27 உலக அளவில் கரோனா பாதிப்பில் இருந்து குண மடைந்தோர் எண்ணிக்கை 3.21 கோடியாக உயர்ந் துள்ளது.
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.
இந்நிலையில், உலகம் முழுவதும் தற்போதைய நில வரப்படி, 4,37,62,882 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 3,21,56,968 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 11 லட்சத்து 64 ஆயிரத்து 191 பேர் உயிரிழந் துள்ளனர்.
No comments:
Post a Comment