டெக்கான் கிரானிகல், ஹைதராபாத்:
- பல்கலைக்கழக மானியக்குழு இந்தியாவில் 24 போலி பல்கலைக் கழகங்கள் உள்ளது என அடையாளம் கண்ட்டு பட்டியலிட்டுள்ளது. இதில் உ.பியில் 8, தில்லி -7, ஒடிசா - 2, மேற்கு வங்கம் -2, கருநாடகா - 1, கேரளா - 1, மகாராட்டிரா - 1, புதுச்சேரி - 1 உள்ளது. இவற்றில் படிக்கும் மாணவர்களுக்கு எந்த பட்டமும், சான்றிதழும் வழங்க முடியாது என்றும் அறிவித்துள்ளது.
தி இந்து:
- விவசாயிகளைப் பாதிக்கும் வேளாண் மசோதாக்கள் குறித்து இன்று பேச்சு வார்த்தை நடத்திட மத்திய அரசு விடுத்த அழைப்பினை பஞ்சாப் மாநிலம் விவசாய அமைப்புகள் உள்ளிட்ட 30 விவசாய அமைப்புகள் நிராகரித்தன.
- சிறப்பு திருமண சட்டத்தில் பதிவு செய்து கொள்ளும் திருமண தம்பதிகள் குறித்து முப்பது நாட்களுக்குள் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கும் பிரிவை நீக்கக் கோரி, மதமறுப்புத் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் தொடுத்த வழக்கை டில்லி உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு, மத்திய அரசுக்கு இது குறித்து பதிலளிக்க உத்தர விட்டுள்ளது.
தி டெலிகிராப்:
- எதிர்ப்புகள் ஜனநாயகத்தில் தவிர்க்க முடியாதது. ஆனால், பொது இடங்கள், சாலைகளை மறித்து போராட்டம் நடத்துவது மக்களின் அடிப்படை உரிமையைப் பறிக்கும் செயல் என்று குடி யுரிமை திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து டில்லி ஷாஹின் பாக்கில் இரண்டு மாதத்திற்கும் மேலாக ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற தொடர் போராட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
- குடந்தை கருணா
8.10.2020
No comments:
Post a Comment