மருததுவக் கல்விக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிடாமல் மத்திய அரசு அலைக்கழிப்பதா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 26, 2020

மருததுவக் கல்விக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிடாமல் மத்திய அரசு அலைக்கழிப்பதா

மருததுவக் கல்விக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிடாமல் மத்திய அரசு அலைக்கழிப்பதா? நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி குற்றச்சாட்டு



 சென்னை, அக். 26- நடப்பு ஆண்டுக்கான 'நீட்' தேர்வு முடிவுகள் வெளியான போதும் மாணவர்களுக்கான மாநில தரவரிசை பட்டியலை வெளியிடாமல் மத்திய அரசு அலைக்கழித்து வருகிறது.


இந்த மாநில வாரி மதிப்பெண்களை வெளியிட்டால் மாணவர்கள் சுகாதார அறிவியல் இயக்குநரகத்தின் (DGHS) படி நடக்கும் கலந்துரையாடலில் கல்லூரிகளை தேர்ந்தெடுக்கும் போது உதவியாக இருக்கும். ஆனால் தற்போது தரவரிசை பட்டியல் வெளியிடப்படாததால் தமிழக மாணவர்கள் இந்திய அளவில் அரசு கல்லூரிகளைத் தேர்ந்தெடுப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.


உதாரணமாக, மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் 250 இடங்களில் 37 இடங்களை DGHS-க்கு அரசு ஒதுக்குகிறது. முதல் 37 மாண வர்களுக்கு இடம் கிடைக்கும். ஆனால், 38விவது தரவரிசையில் உள்ள மாணவர் அதே கல்லூரியில் சேர்க்கைக்கு மாநில ஆலோ சனைக்குக் காத்திருக்க வேண்டியிருக்கும். இதனால் மாணவர்கள் அந்த கல்லூரியைத் தேர்வு செய்வதா இல்லை காத்திருக்க வேண்டுமா என்றக் குழப்பமும் கேள்வியும் எழும் நிலைக்கு தள்ளப்படுவர் என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


இந்த விவரம் தொடர்பாக தி.மு.க மக்களவைக் குழு துணைத் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தமிழக மாணவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகும் அளவுக்கு பெரும் சிக்கலை மத்திய அரசு மாணவர்கள் மீது திணித்துள்ளது. 'நீட்' தேர்வு ஆணையம், மாநில வாரி மதிப்பெண் பட்டியலை வெளியிடாமல் தாமதப்படுத்துவதால், தமிழக மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான மருத்துவக் கல்லூரியைத் தேர்ந்தெடுக்க முடியாமல் அல்லலுற்று வருகின்றனர்.


இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் தமிழக முதல்வர் தமிழகத்தை வஞ்சித்து பாஜகவுக்குத் துதிபாடிக் கொண்டிருப்பார்” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.


சிவில் சர்வீஸ் தேர்வுகளில் சாதித்த தமிழர்கள்


சென்னை, அக். 26- அய்ஏஎஸ், அய்பிஎஸ் மற்றும் அய்ஆர்எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வு அண்மையில் வெளி யிடப்பட்டது. இந்த தேர்வில் தமிழகத்தில் இருந்து மட்டும் 750 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  இவர்களுக்கான முக்கியத் தேர்வுகள் அடுத்த ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி  தொடங்க உள்ளது.


 மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.)ஆண்டுதோறும் அய்ஏஎஸ், அய்பிஎஸ், மற்றும் அய்ஆர்எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்வுகளை நடத்துகிறது. இந்த ஆண்டு சிவில் சர்வீஸ் பணியில் அடங்கிய 796 பதவிகளை நிரப்புவதற்கு கடந்த பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.. இத்தேர்வுக்கு சுமார் 11 லட்சம் பேர் விண்ணப்பித்தார்கள்.


 இவர்களுக்கான முதல் நிலை தேர்வு மே மாதம் 31ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. கரோனா பரவலை தொடர்ந்து ஜூன் 5ஆம் தேதிக்கு தேர்வு தள்ளி வைக்கப்பட்டது. கரோனா பரவல் அதிகமானதை தொடர்ந்து அக்டோபர் 4ஆம் தேதி தேர்வு தள்ளிவைக்கப்பட்டது. இதன்படி அக்டோபர் 4ஆம் தேதி கடும் கட்டுப்பாடுகளுடன் தேர்வு நடந்தது.  இந்தியா முழுவதும் 72 நகரங்களில் 2,569 மய்யங்களில் நடந்த தேர்வை. சுமார் 4 லட்சத்து 50 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, வேலூர் உள்ளிட்ட நகரங்களில் 300 இடங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. இத்தேர்வை தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 50,000 பேர் எழுதினர்.


தேர்வு நடந்த தேர்வு 19 நாட்களில் முதல்நிலை தேர்வுக்கான முடிவுகளை யுபிஎஸ்சி வெளியிடப்பட்டது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளமான www.upsc.gov.in வெளி யிடப்பட்டது. எத்தனை பேர் தேர்ச்சி சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வில் இந்தியா முழுவதும் 10,564 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். தமிழகத்தில் மட்டும் சுமார் 750 பேர் வரை தேர்ச்சி பெற்று உள்ளனர்.


முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு அடுத்தக்கட்டமாக மெயின் தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி நடக்கிறது. இந்த தேர்வு மொத்தம் 5 நாட்கள் நடைபெறும். மெயின் தேர்வுக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.. சென்னையில் மட்டும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது வரும் 28ஆம் தேதி முதல் தொடங்குகிறது. நவம்பர் 11ஆம் தேதி மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம். தமிழ்நாட்டை பொறுத்தவரை மெயின் தேர்வு சென்னையில் மட்டும் நடைபெறும். மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் அடுத்தக்கட்டமாக நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அதில் தேர்ச்சி பெறுவோருக்கு பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இந்த ஆண்டு அதிகம் பேர் தேர்ச்சி பெற்று அய்ஏஎஸ் அதிகாரிகளாக சாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


22 சதவீத ஈரப்பதமுள்ள நெல் கொள்முதல் குறித்து ஆய்வு:



நாகப்பட்டினம், அக். 26- நாகை மாவட்டத்தில் செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மத்திய உணவு மற்றும் தரக்கட்டுப் பாட்டு உதவி இயக்குநர் யாதேந்திரஜெயின் தலைமையிலான மத்திய குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.  அங்கு சாட்டியக்குடியில் செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ஆய்வு செய்த அதிகாரிகள் குழுவினர், நெல்மூட்டைகளில் ஊசி கரண்டி மூலம் துளையிட்டு நெல்லை பரிசோதனைக்காக எடுத்தனர்.


அந்த நெல்லை பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து அந்த நெல் எந்த பகுதியில் விளைந்தது? யாருடைய நிலத்தில் விளைந்தது? இந்த நெல் எந்த ரகத்தை சேர்ந்தது? போன்ற விவரங்களை குறிப் பெடுத்து எழுதி வைத்துக்கொண்டனர்.


பின்னர் அதிகாரிகள் குழுவினர் நிருபர்களிடம் கூறியதாவது:-


தற்போது மழைக்காலம் என்பதால் விவசாயிகள் 22 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் அரசு 17 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை மட்டும் கொள்முதல் செய்கிறது. 22 சதவீதம் ஈரப்ப தம் உள்ள நெல்லை கொள்முதல் செய்யலாமா? என்பது குறித்து ஆய்வு செய்ய கொள்முதல் செய்த நெல்லை எடுத்து செல்கிறோம். ஆய்வகத்தில் இந்த நெல் மாதிரிகளை ஆய்வு செய்த பின்னர் அதன் அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்படும்.


இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


No comments:

Post a Comment