உதகை, அக். 26- கரோனா காலத்தில் உலகமே வீட்டில் பாதுகாப்பாக இருந்த போது உயிரைதுச்சமென மதித்து பணிக்கு வந்து வேலை செய் தவர்களுக்குச் சம்பளம் வழங் காமல் இருக்கும் அரசைக் கண்டித்து தூய்மைப் பணி யாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உலகளவில் கரோனா எனும் கொடிய வைரஸ் கோரத் தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது. கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தங்கள் பணியைத் தொய்வில் லாமல் செய்து வருகின்றனர் தூய்மைப் பணியாளர்கள்.
சேவை எண்ணத்துடன் பணியில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களை “கரோனா வீரர்கள்” என்று அரசு கொண் டாடியது. மருத்துவர்களுக்கு அடுத்து நோய்க் கிருமிகளு டன் நேரடியாகப் போராடு வது இந்தத் தூய்மைப் பணி யாளர்கள்தான்.
அதுமட்டுமல்லாது, தரமான முகக்கவசம், கையு றைகள் போன்றவை இல்லா மல் தூய்மைப் பணியாளர்கள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், தூய்மைப் பணியாளர்களின் பற்றியும் கொஞ்சமும் அக் கறை இல்லாத அரசாக எடப் பாடி அரசு செயல்படுவதாக தூய்மைப் பணியாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், உதகை நகர்ப்புறத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களாக சுமார் 200 க்கும் மேற்பட் டோர் பணிபுரிந்து வருகின்ற னர். இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக தங்களுக்கு ஊதி யம் வழங்காததால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சிறப்பு ஊதியத்தை உட னடியாக வழங்க வேண்டும், இரண்டுமாதமாக நிறுத்தி வைக்கப்பட்ட ஊதியத்தை வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்றைய மைசூர் கேரளா செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 200க்கும் மேற்பட் டோர் சாலை மறியலில் ஈடு பட்டனர்.
இதையடுத்து காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுப் பட்டவர்களின் நடத்திய பேச்சுவார்த்தை அடுத்து சாலை மறியலைக் கைவிட்ட னர். இந்நிலையில், இரண் டாம் நாளான இன்று சுமார் 200க்கும் மேற்பட்ட ஒப்பந் தத் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது, தூய்மைப் பணியாளர்களுக்கு அரசு அறிவித்த ஊதியம் கிடைக்கும் வரை பணிக்குச் செல்வதில்லை எனவும் உட னடியாக தங்களுக்கு ஊதியம் வழங்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டு மெனவும் கேட்டுக்கொண்டனர்.
மேலும் தவறும்பட்சத்தில் 200 தூய்மைப் பணியாளர் களின் குடும்பங்களும் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளிக்கப் போவதாகவும் தெரி வித்தனர். எனவே கரோனா காலத்தில் அச்சமின்றி பணிக்கு வந்து வேலை செய்தவர்களுக் குச் சம்பளம் வழங்காமல் இருப்பது அரசின் அலட்சி யத்தையே காட்டுகிறது.
No comments:
Post a Comment