கழகத் தலைவர் இரங்கல்
கடலூர் முதுநகரின் பிரபல காங்கிரஸ் சுதந்திரப் போராட்ட வீராங்கனையும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான தியாகி அஞ்சலை அம்மாள் அவர்களது மகன் ஜெயவீரன் நேற்று (8.10.2020) மறைந்தார் என்ற செய்தி நம்மை மிகவும் துயரம் அடையச் செய்கிறது.
சில வாரங்களுக்கு முன் 'தியாகி அஞ்சலை அம்மாள்'பற்றி ஒரு மலர் வெளியிட வேண்டும்; அதற்கு உங்கள் நினைவைப் பதிவு செய்து தாருங்கள் என்று தொலைபேசி வாயிலாக கேட்டார் சகோதரர் ஜெயவீரன்.
தியாகி திருமதி அஞ்சலை அம்மாள் எங்கள் குடும்பத்திற்கு மிகவும் வேண்டியவரும் கூட.
அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.
சென்னை
9.10.2020
No comments:
Post a Comment