'ராணி' அ.மா.சாமி மறைந்தாரே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 9, 2020

'ராணி' அ.மா.சாமி மறைந்தாரே!


'தினத்தந்தி' குழுமத்தைச் சேர்ந்த ராணி, ராணி முத்து இதழ்களின் ஆசிரியரும், 'தினத்தந்தி'யில் மூத்த செய்தியாளராகவும் இருந்து முத்திரை பதித்த "ராணி அ.மா. சாமி" என்று அழைக்கப்படுப வரும்,  தமிழகம் மற்றும் வெளிநாட்டு தமிழர்கள் அறிந்த மூத்த பத்திரிகையாள ருமான அ.மா.சாமி (அ.மாரிசாமி) தம் 85ஆம் வயதில் சென்னை அண்ணா நகர் சிந்தாமணி அருகே உள்ள அவரது மகன் மாறன் இல்லத்தில் இன்று (8.10.2020) மறைந்த செய்தி அறிந்து பெரிதும் வருந்துகிறோம்.


நெல்லை மாவட்டம் குக்கிராமத்தைச் சேர்ந்தவர், உழைப்பால் உயர்நிலைக்கு வந்தவர்.


திருச்சியில் 'தினத்தந்தி'யின் செய்தியாளராக இருந்தபோது தந்தை பெரியாரை அடிக்கடி சந்திக்கும் அரிய வாய்ப்பைப் பெற்றவர்.


சென்னை பெரியார் திடல் - பக்கத்து வீட்டுக்காரரான ராணி ஆசிரியர் அ.மா.சாமி அவர்கள் பெரியார் திடலில் உள்ள பெரியார் நூலகம் - ஆய்வகத்தைப் பயன்படுத்திக் கொண்டு பல நூல்களை எழுதியவர். திராவிட இயக்க இதழ்கள்பற்றி அவர் எழுதிய நூல் குறிப்பிடத்தக்கதாகும்.


மூத்த பத்திரிகையாளரும், நமது நண்பரும், பழகுவதற்கு இனியவருமான "ராணி அ.மாரிசாமி" அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர் பிரிவால் துயருறும் அவர்தம் குடும்பத்தினருக்கும்,  பத்திரிக்கையாளர் களுக்கும், குறிப்பாக 'தினத்தந்தி' குழுமத்திற்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


 


 


கி.வீரமணி


தலைவர்,


திராவிடர் கழகம்.


சென்னை


8.10.2020


 


 


No comments:

Post a Comment