கோவிந்தகுடி ஆசிரியர் தெட்சிணாமூர்த்தி அவர்களுக்கு வீர வணக்கம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 9, 2020

கோவிந்தகுடி ஆசிரியர் தெட்சிணாமூர்த்தி அவர்களுக்கு வீர வணக்கம்!


கும்பகோணம் - வலங் கைமான் ஒன்றியம் கோவிந்த குடி பெரியார் பெருந் தொண்டர் மானமிகு வை. தெட்சிணாமூர்த்தி (வயது 85) அவர்கள்  நேற்று (8.10.2020) மறைவுற்றார் என் பதை அறிவிக்க வருந்து கிறோம்.


ஆசிரியர் பணியில் இருந்தபோதும் சரி, ஓய்வுக்குப் பின்பும்கூட தந்தை பெரியார் அவர்களின் சீரிய தொண்டராகக் கொள்கை வழி வாழ்ந்தவர் ஆவார். ஓய்வுக்குப்பின் கழகம் நடத்திய போராட்டங்களில் எல்லாம் கலந்து கொள்ளத் தவறாதவர்.


கோவிந்தகுடியில் மூவேந்தர் என்று அழைக்கப் பட்டவர்கள் சுயமரியாதைச் சுடரொளிகள் தில்லை சிகாமணி, மாசிலாமணி, தெட்சிணாமூர்த்தி ஆகியோர் ஆவர்.


மகன்களும், மகள்களும் கொள்கை வழி வார்த் தெடுக்கப்பட்டவர்கள்.


சீரிய கருஞ்சட்டை வீரர் மறைவிற்குக் கழகத்தின் சார்பில் வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


அவர் தம் பிரிவால் துன்பத்திற்கு ஆளாகி இருக்கும் குடும்பத்தினருக்கும், தோழர்களுக்கும் கழகத்தின் சார்பில் இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


 


கி.வீரமணி


தலைவர்,


திராவிடர் கழகம். 


சென்னை


9.10.2020


No comments:

Post a Comment