சட்டமன்ற உறுப்பினர்கள் போர்க்கொடி
அகர்தலா, அக். 13- திரிபுரா சட்டப் பேர வைத் தேர்தலில் பாஜக சார்பில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களில் பிப்லப் குமார்தான் மிகப்பெரிய பணக் காரர். அதனாலேயே முதல்வர் பதவியி லும் அவர் அமர்த்தப்பட்டார்.ஆனால் ஆரம்பம் முதலே எதையாவது உளறி சர்ச்சையில் சிக்குவது முதல்வர் பிப்லப் குமாரின் வாடிக்கையாகி விட்டது. சட்டமன்ற கன்னிப் பேச்சின்போது, “மகாபாரத காலத்தில் சேட்டிலைட், இண்டர்நெட் வசதிகள் இருந்தது”என்று கூறி அதிர்ச்சி அளித்தார்.
அதைத்தொடர்ந்து, “அய்ஸ்வர்யா ராய்க்கு உலக அழகிப் பட்டம் கொடுத் தது சரி, ஆனால், டயானா ஹெய்டனுக்கு எதற்காக உலக அழகிப் பட்டம் கொடுத் தார்கள்?” என்று கேட்டதாகட்டும், “சிவில் இஞ்சினியரிங் படித்தவர்கள் மட்டுமே சிவில் சர்வீஸ் தேர்வு எழுத வேண்டும்; வேலையில்லாத இளைஞர் கள் பீடா கடை வைக்க வேண்டும்” என்று ‘ஆலோசனைகள்’ வழங்கிய தா கட்டும், தானொரு முதல்வர் என்பதை மறந்து உளறுவதையே வாடிக்கையாக் கினார்.
“குளத்தில் வாத்துகள் நீந்துவதால் தண்ணீரிலுள்ள ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும், தண்ணீர் சுத்தமாகும்” என்று பிப்லப் கூறியது, விஞ்ஞானி களுக்கே புரியாத புதிராக பேசப்பட்டது. அண்மையில்கூட, வீடுகளில் விவேகா னந்தர் படம் இருந்தால் 35 ஆண்டுகளுக்கு பாஜக ஆட்சியை அசைக்க முடியாது என்று பேசியிருந்தார். இந்நிலையில் தான், பிப்லப் குமாரின் ‘மோசமான தலைமை’ மற்றும் ‘ஆதிக்க செயல்பாடு’ ஆகியவற்றை சகிக்க முடியவில்லை என்றுசுதீப் ராய் பர்மன், சுஷாந்தா சவுத்ரி, பரிமல் டெப் பார்மா,டி.சி. ராங்க்வால், ஆஷிஷ் தாஸ், அதுல் தேவ் பர்மா, பர்ப் மோகன் திரிபுரா மற்றும் ராம் பிரசாத் பால் உள்ளிட்ட7 சட்ட மன்ற உறுப்பினர்கள் புகார் கூறியுள் ளனர். பிப்லப்பை மாற்ற வேண்டும் என்று டில்லியில் முகாமிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment