இடமாற்றம் செய்த காவல்துறை அதிகாரிகளின் பின்னணியைத் தெரிந்து கொள்வீர்!
இவர்தான் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த காவலர்களை பணி இட மாற்றம் செய்து உத்தரவிட்ட சிறீஅபிநவ் என்கிற காவல்துறை அதிகாரி!
காவல்துறை சீருடையோடு, மத அடையாளங்களுடன்,பார்ப்பன புரோகிதர் களுடன் மத வழிபாட்டில் இருப்பது சீருடைப் பணியாளர் விதிகள்,தமிழக அரசின் ஆணைகள்,முன்பு பிறப்பிக்கப்பட்டுள்ள தமிழக காவல்துறை தலைவர்களின் உத்தரவுகள் இவற்றிற்கு எதிரானது.இவற்றை மீறிய செயல் தானே - இவர்மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? பெயர் அபினவ் குமார் அய்.பி.எஸ்., சொந்த ஊர் உத்தரப் பிரதேச மாநில பரேலி, 1996 ஆம் ஆண்டு அய்பிஎஸ் முடித்தவர்.
பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தது குற்றம் என்று உத்தரப் பிரதேச அய்பிஎஸ் அதிகாரி மாற்றல் உத்தரவு பிறப்பிப்பார். ஆனால் இங்கே விழுப்புரம் வட்டம் எஸ்பி.மேல்மலையனூர் தீமிதி விழாவில் கலந்து கொண்டு சீருடையோடு 'நேர்த்திக் கடன்' செலுத்துகிறாரே - இது எந்த விதியின் கீழ் வருகிறது? பெரியார் சிலைக்கு மரியாதை செய்தவர்களை இடமாற்றம் செய்ததன் பின்னணி புரிகிறதா?
No comments:
Post a Comment