இதர பிற்படுத்தப்பட்டோருக்கு திருச்சி உள்ளிட்ட மத்திய சட்டப் பல்கலைக் கழகங்களில் இடஒதுக்கீடு மறுப்பு! மத்திய அமைச்சர் பொக்ரியால் தலையிடக்கோரி  டி.ஆர்.பாலு எம்.பி. அவசரக் கடிதம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 11, 2020

இதர பிற்படுத்தப்பட்டோருக்கு திருச்சி உள்ளிட்ட மத்திய சட்டப் பல்கலைக் கழகங்களில் இடஒதுக்கீடு மறுப்பு! மத்திய அமைச்சர் பொக்ரியால் தலையிடக்கோரி  டி.ஆர்.பாலு எம்.பி. அவசரக் கடிதம்!


சென்னை,அக்.11, திருச்சி உள் ளிட்ட மத்திய சட்டப் பல்கலைக் கழகங்களில் இதர பிற்படுத்தப்பட் டோருக்கு இட ஒதுக்கீடு மறுப்பதை -_ தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் எச்சரித்தும் சட்ட விதிகள் மீறப்பட்டுள்ளது குறித்து, அமைச்சர் பொக்ரியால் தலையிடக்கோரி திமுக பொருளா ளரும் நாடாளுமன்ற திமுக குழுத் தலை வருமான டி.ஆர்.பாலு அவசரக் கடிதம் எழுதியுள்ளார்.


திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு, தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, தேசிய சட்டப்பல் கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கையில் பிற்படுத்தப்பட் டோருக்கு இட ஒதுக்கீடு தொடர்பான சட்ட விதிகள் வேண்டு மென்றே முற்றிலும் புறக்கணிக் கப்பட்டு, பின்பற்றப்படாதது குறித்து, மத்திய கல்வித் துறை அமைச்சர் டாக்டர் ரமேஷ் பொக்கிரியால் அவர்களுக்கு, நேற்று (10.1-0.2020) எழுதிய விரி வான அவசரக் கடிதத்தில் எடுத்துரைத்து, இவ்விஷயத்தில் உடன டியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.


அவரது கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
தேசிய சட்டப் பல்கலைக் கழகங் களின் 2020_-21ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான அறிவிக் கையில், சட்டப் படிப்பிற்கும், சட்ட மேல் படிப்பிற்கும், பிற்படுத்தப்பட் டோருக்கான இட ஒதுக்கீடு வழங்கப்படாமல், இட ஒதுக்கீட்டுக் கொள்கை அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது. மத்திய கல்வி நிறு வனங்கள் இடஒதுக்கீட்டு சட்டம் 2006இன்படி, மாணவர்களுக்கான சேர்க்கையிலும், ஆசிரியர்களின் வேலை வாய்ப்பிலும், அனைத்துப் பல்கலைக் கழகங்களும் 27 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென பல்கலைக் கழக மானியக் குழு உறுதிப்படுத்தியுள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டளையை, 13 தேசிய சட்டப் பல்கலைக் கழகங்கள் அனைத்தும் முற்றிலுமாக மீறி யுள்ளன.
பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு முற்றிலும் நிராகரிப்பு!
தமிழ்நாட்டில் அமைந்துள்ள திருச்சி உள்ளிட்ட தேசிய சட்டப் பல்கலைக் கழகங்களில் பி.ஏ., எல்.எல்.பி. அய்ந்து வருடப் படிப்பிற் கான 120 இடங்களில், பொதுப்பிரிவினருக்கு 93 இடங்களும், தாழ்த் தப்பட்ட வகுப்பினருக்கு 18 இடங் களும், பழங்குடியினருக்கு 9 இடங்களும் நிரப்பப்படும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், பிற் படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு முற்றிலுமாக, பெங்களூரு தேசிய சட்டப்பல்கலைக் கழகத் தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவில் உள்ள 13 தேசிய சட்டப் பல்கலைக் கழகங்களில் 1606 சட்டப் படிப்பிற்கான இடங் களும், 415 சட்ட மேற்படிப்பிற்கான இடங்களும், இந்த கல்வியாண்டில் (2020_-21) நிரப்பப்படவுள்ளன. டில்லி தேசிய சட்டப் பல்கலைக் கழகம், பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகிதத்திற்குப் பதிலாக 22 சதவிகிதம் மட்டுமே வழங்க திட்டமிட்டுள்ளது. 


இடஒதுக்கீட்டை மீறும் சட்டப் பல்கலைக் கழகங்கள் மீது கடுமையான நடவடிக்கை!


தி.மு.க. பங்கேற்றிருந்த அய்க்கிய முற்போக்குக் கூட் டணி அரசில் இயற் றப்பட்ட பிற்படுத்தப் பட்டோருக்கான இடஒதுக்கீட்டை மீறும் தேசிய சட்டப் பல்கலைக் கழகங்கள் மீது, கடுமையான நட வடிக்கைகள் எடுக் கப்படும் என ஜூன் 2020இல் தேசிய பிற் படுத்தப் பட்டோர் ஆணையத்தின் தலைவர் கட்டளைப் பிறப்பித்துள்ளார்.


ஏற்கெனவே, 2019 ஜூன் மாதத்தில், இட ஒதுக்கீடு வழங்காத அய்தராபாத் தேசிய சட்டப் பல்கலைக் கழ கத்தின் துணைவேந் தரை, தேசிய பிற்படுத் தப்பட்டோர் ஆணை யம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மத்திய கல்வி நிறுவனங்கள் இட ஒதுக்கீட்டு சட்டம் 2006இன்படி அனைத்து இந்திய இடங்களில், 27 சதவிகித பிற்படுத்தப் பட்டோருக்கான இட ஒதுக்கீட் டையும், மாநில இடங்களில், அந்தந்த மாநில ஆணைகளின் படியும், தேசிய சட்டப் பல்கலைக் கழகங்கள், 2020 ஆம் ஆண்டு முதல் பின்பற்ற வேண்டுமென, தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தின் தலைவர் கட்டளைப் பிறப் பித்துள்ளார். 
விதிமீறல்களை நீக்க பல்கலைக் கழக மானியக் குழு நடவடிக்கை எடுக்க வேண்டும்!
தேசிய சட்டப் பல்கலைக் கழகங்களில் மாணவர் சேர்க்கையில், இட ஒதுக்கீடு தொடர்பாக நடை பெறும் விதிமீறல்களை நீக்க, பல்கலைக்கழக மானியக் குழு நடவடிக்கை எடுக்க வேண்டு மெனவும், இதுகுறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான ஆதாரங் களை உடனடியாக அளிக்க வேண்டுமெனவும், 2019 ஆம் ஆண்டு வரையிலும், பல்கலைக் கழக மானியக் குழுவின் இடஒதுக்கீட்டு ஆணைகளை மீறிய பல்கலைக் கழகங்கள்மீது, நட வடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கட்டளைப் பிறப்பித் துள்ளது. இடஒதுக்கீட்டுக் கொள்கையை பின்பற்ற ஆவன செய்வீர்! எனவே, தாங்கள் (மத்திய கல்வித் துறை அமைச்சர் டாக்டர் ரமேஷ் பொக்கிரியால்) உடனடியாக தலை யிட்டு, மத்திய கல்வி நிறுவனங்கள் இடஒதுக்கீட்டு சட்டம் 2006இன் படி அனைத்து தேசிய சட்டப் பல்கலைக் கழகங்களும், சட்டப் படிப்பிலும், சட்ட மேல்படிப்பிலும், அனைத்து இந்திய இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சத விகித இடங்களையும், மாநில இடங்களில், அந்தந்த மாநிலங் களின் ஆணைப்படியும், இந்தக் கல்வியாண்டிலேயே (2020-_21) இட ஒதுக்கீட்டுக் கொள்கை பின் பற்றப்பட, ஆவன செய்ய வேண் டுமென கேட்டுக் கொள்கிறேன்.


இவ்வாறு திருப்பெரும்புதூர் மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு மத்திய கல்வித் துறை அமைச்சர் டாக்டர் ரமேஷ் பொக் கிரியால் அவர்களுக்கு, எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.


No comments:

Post a Comment