இந்தியன் எக்ஸ்பிரஸ்:
- மோடி அரசு, ஜி.எஸ்.டி. பிரச்சினையைத் தீர்க்கவில்லை என்றால், பழைய வரி விதிப்பு முறைக்கு மாற்றிக் கொள்ள வேண்டும். கரோனா தொற்று தடுப்பிலும் மோடி அரசு அரசியல் செய்கிறது. பீகார் தேர்தல் வாக்குறுதியாக கரோனா தடுப்பூசி இலவசம் என்றால், ஏனைய இந்தியப் பகுதிகள் எல்லாம் பாகிஸ்தானா? பங்களா தேசமா? அல்லது கஜகஸ் தானா? என சிவ சேனா தலைவரும் மகாராட்டிர முதல்வருமான உத்தவ் தாக்கரே மோடி அரசை கடுமையாக சாடியுள்ளார்.
- அரசமைப்புச் சட்டப் பிரிவு 370 நீக்கம், ராமன் கோவில் என அனைத்துமே மோடி திட்டமிட்ட நாளில் நடைபெற்றன. அதே போன்று பாகிஸ்தான், சீனாவுடனும் போர் செய்வதற்கும் நாள் குறிக்கப்பட்டுள்ளது என உ.பி. பாஜக மாநிலத் தலைவர் சுவந்திர தேவ் சிங் பாஜக தொண்டர்களிடையே பேசியது வீடியோ வெளியாகி சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
- இந்திய வரலாற்றையும் பண்பாட்டையும் திருத்தி அமைக்க வேண்டும் என தற்போதைய மோடி அரசு கூறுவது, அவர்களது சிந்தனை வழியே வரலாற்றை எழுதுவது என்ப தாகும் என மூத்த பத்திரிக்கையாளர் டி.ஜே.எஸ். ஜார்ஜ் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
- ஆயுத பூஜை என்ற பெயரில் ராவணன் உருவ பொம்மையை எரிக்கும் சடங்கு வட நாட்டில் பல இடங்களில் நடந்தாலும், உ.பி. மதுராவில் ராவணனுக்கு பூசை செய்துள்ளனர். ராவணன் நல்ல அறிவாளி. பண்பாடு உள்ளவன். அவனது சிலையை விரைவில் மதுராவில் நிறுவுவோம் என லங்கேஷ் பக்த மண்டல் தலைவர் ஓம்வீர் சரஸ்வத் தெரிவித்துள்ளார்.
- பஞ்சாப் மாநிலத்தையடுத்து, ராஜஸ்தான் மாநிலத்திலும் வேளாண் சட்டம் தனியே இயற்றப்படும் என காங்கிரஸ் தலைவர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார்.
தி டெலிகிராப்:
- சீன ராணுவம் இந்திய எல்லையில் ஊடுருவி உள்ளது என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் கூறியுள்ளார். இந்திய எல்லையில் சீனா ஊடுருவவில்லை என பிரதமர் மோடி கூறி வந்தார்.
- மேற்கு வங்கத்தில் வங்க மொழி பேசுவோரின் சதவீதம் 8.30லிருந்து 8.01-ஆக குறைந்துள்ளதற்கு, ஹிந்தித் திணிப்பே காரணம் என தெரிய வந்துள்ளது. இதே போன்று ஏனைய மாநில மொழிகளும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது என்றும் தெரி விக்கப்பட்டுள்ளது.
- வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது கொண்டுவரப்பட்ட, ஆட்டிசம், மனவளர்ச்சிக் குறைபாடு, மனநலம் பாதிப்பு மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட ஊனமுள்ளவர்கள் நலனுக்கான தேசிய அறக்கட்டளை சட்டம் 1995இல் திருத்தத்தை மேற்கொள்ள மோடி அரசு முடிவெடுத்துள்ளது. இதன் காரணமாக இக்குறிப் பிட்ட பிரிவினர்க்கான நலத் திட்டங்கள் வெகுவாக பாதிக்கப் படும் என தெரிகிறது.
- குடந்தை கருணா
26.10.2020
No comments:
Post a Comment