கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரனிடம் வழங்கினர்
பெரம்பலூர் மாவட்ட கழக சார்பில் ‘விடுதலை' சந்தா வழங்கும் நிகழ்ச்சி 28.10.2020 மாலை 5 மணியளவில் அக்ரி ஆறுமுகம் வளாகத்தில் கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் தலைமையில் நடந்தது. நகர தலைவர் அக்ரி ஆறுமுகம் கடவுள் மறுப்பு கூறினார். மாவட்டத் தலைவர் தங்கராசு நோக்க உரையாற்றினார். ‘விடுதலை' சந்தா 100-க்கு குறையாமல் தரவும், தமிழர் தலைவரின் பிறந்தநாள் சிறப்பாக கொண்டாட வேண்டியதன் அவசியம் குறித்தும் முனைவர் துரை.சந்திரசேகரன் பேசினார். இரா. இரங்கராஜ், வி. சின்னசாமி, விஜயேந்திரன், பி. கரிகாலன், வி. ராஜேந்திரன், துறை மங்களம் ரெங்கையா, எசனை பெரியசாமி, ராமு, ரவிக்குமார், பார்த்தசாரதி ராஜ், ஆறுமுகம் ஆகியோர் சந்தா வழங்கினர். ஆசிரியர் நடராஜன் நன்றி கூறினார்.
முதல் கட்டமாக 30 சந்தாக்கள் வழங்கினர். தமிழர் தலைவரின் பிறந்தநாள் அன்று குருதிக் கொடை அளிப்பது மற்றும் மரம் நடுதல் என்று தீர்மானிக்கபட்டது.
No comments:
Post a Comment