காற்று மாசு:  கரோனா பாதிப்பால் இறப்பு அதிகரிக்குமாம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 29, 2020

காற்று மாசு:  கரோனா பாதிப்பால் இறப்பு அதிகரிக்குமாம்!

புதுடில்லி, அக்.29 காற்று மாசுவினால் கரோனாபாதிப்புஅதிகரித்து இறப்பு விகி தமும் அதிகரிக்கும் என்று அறிவியலாளர் கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.


கரோனா மற்றும் காற்று மாசு தடைக் கான தொடர்புகுறித்து அறிவியலாளர்கள் கருத்துகளை வெளியிட்டுள்ளனர். டில்லி மற்றும் வட மாநிலங்கள் பலவும் காற்று மாசுவால் பாதிக்கப்பட்டு வருகின்றன. அங்கெல்லாம் வானம் புகை மூட்டத்துடன் காணப்படுகின்றன. காற்றின் தரமும் வேகமாக மோசம் அடைந்து வருகிறது. இதனால் காற்று மாசுவினால் கரோனா பாதிப்பு அதிகரிக்குமா என்ற கவலை எழுந்துள்ளது.


இருப்பினும் காற்று மாசுவுக்கும், கரோனா வைரஸ் பாதிப்புக்கும் தொடர்பு உள்ளதா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இது தொடர்பாக உலகளவில் ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.


இந்த நிலையில், நீண்ட காலம் காற்று மாசுக்கு ஆளாகிறபோது அது நிச்சயம் நுரையீரல் தொற்றுநோய்க ளுக்கு ஆளாக்கும் என்று அறிவிய லாளர்கள்எச்சரித்துள்ளனர். இதையொட்டி அமெரிக்காவின் ஹார் வர்டு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி யாளர்கள் ஓர் ஆய்வினை நடத்தினர். அதில் காற்று மாசு பி.எம். 2.5 என்ற அளவில் இருக்கிறபோது, அது கரோனா வைரஸ் இறப்பு விகிதத்தில் 8 சதவீதம் அதிகரிக்கிறது என்று தெரிய வந்தது.


இதுபற்றி அந்த ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான சியாவோ வு கூறும்போது,


“டில்லியில் காற்று மாசு அளவு பி.எம். 2.5 என்று அதிகரித்து இருப்பது, கரோனா வைரஸ் அதிகரிப்புக்கு காரணமாக இருக்கலாம்” என கூறியுள்ளார்.


மேலும் அவர் கூறும்போது,


“நீண்ட கால காற்று மாசுபாட்டிற் கும், கரோனா வைரசுக்கான உறவு பல ஆய்வுகளில் ஆவணப்படுத்தப்பட்டுள் ளது.  காற்றுமாசுபாட்டின் மோசமான உடல்நல பாதிப்புகள் மக்களை நோய்த் தொற்றுக்கு ஆளாக்கும் அல்லது கரோனா வைரஸ் பெருந்தொற்றின் அறிகுறிகளின் தீவிரத்தை மேலும் கடுமையாக்கக் கூடும்” என தெரிவித்துள்ளார்.


கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் ஏப் ரல் மாதம் நடத்திய ஆய்வில், இங்கி லாந்தின் ஒரு பகுதியில் அதிகளவு காற்று மாசுபாட்டுக்கும், கரோனா வைரசால் ஏற்படும் தீவிரத்தன்மைக்கும் இடை யேயான தொடர்பு தெரிய வந்தது.


அந்த ஆய்வை நடத்திய ஆராய்ச்சி யாளரான மார்கோ டிராவாக்லியோ கூறும் போது,


“எங்கள்கண்டுபிடிப்புகளின்அடிப் படையில் குளிர்காலத்தில் இந்தியா வில்அதிகளவுகாற்றுமாசுபாட்டிற்கும், கரோனா வைரசுக்கும் இடையே யான தொடர்பை நான் இங்கிலாந்தில் கண்டறிந்தது போலவே எதிர்பார்க்கி றேன்” என குறிப்பிட்டுள்ளார்.


வரும் குளிர்காலத்துக்கு முன்பாக பல மாதங்கள் காற்று மாசுபாட்டின் அளவு தொடர்ந்து சட்ட வரம்புகளை விட அதிகமாக இருந்தால், நவம்பர் மற்றும் அதற்கு பின்னர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும், அந்த நிலைகளுக்கும், கரோனா வைரஸ் பரவலுக்கும் இடை யேயான உறவை பார்க்க முடியும் என நான் எதிர்பார்க்கிறேன் எனவும் அவர் கூறினார்.


நீண்டகாலமாக காற்று மாசு 2.5 பி.எம். அளவில் இருந்தால், அது நுரை யீரலின் தொற்றுநோய் தடுப்பு திறனை பலவீனப்படுத்தி விடும், எனவே மக்கள் கரோனா தொற்றுக்கு ஆளாக நேரிடும் எனவும் அறிவியலாளர்கள் எச்சரிக் கின்றனர்.


No comments:

Post a Comment