அய்.நா.வின் உலக உணவுத் திட்டத்திற்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 10, 2020

அய்.நா.வின் உலக உணவுத் திட்டத்திற்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு


ஸ்டாக்ஹோம்,அக்.10, மருத்துவம், இயற்பியல், வேதியியல் துறைகளைத் தொடர்ந்து, அமைதிக்கான நோபல் பரிசை நார்வே தலைநகர் ஓஸ்லோவில் நோபல் பரிசு குழு நேற்று (அக்.9) அறிவித்தது. இதில், அமைதிக்கான நோபல் பரிசுக்கு அய்.நா.-வின் உலக உணவுத் திட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக பரிசுக் குழுவின் தலைவர் பெரிட் ரெய்ஸ்-ஆண்டர்சன் அறிவித்தார்.


அப்போது அவர், போருக்கான ஆயுதமாக பசியை பயன்படுத்துவதைத் தடுக்க உலக உணவுத் திட்டம் பங்களிப்பை செய்துள்ளதாக தெரிவித்தார்.  வன்முறைகளுடன் கரோனா பெருந்தொற்றும் ஏற்பட்டதால் ஏமன், காங்கோ, நைஜீரியா, தெற்கு சூடான், பர்கினோ பசோ ஆகிய நாடுகளில் பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்த தாகவும்,


அவர்களுக்கு தேவை யான உதவிகளை உலக உணவுத் திட்டம் வழங்கிய தாகவும் ஆண்டர்சன் கூறி னார். உணவு பாதுகாப்பு வழங்குவது என்பது, வறுமையைத் தடுப்பதுடன், அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தும் என்று அவர் தெரிவித்தார். உலக உணவு அமைப்புக்கு விருது வழங்குவதன் மூலம், பசியால் வாடும் கோடிக் கணக்கான மக்களின் பக்கம் உலகின் பார்வையை திருப்ப விரும்புவதாகவும் தேர்வுக்குழு தலைவர் கூறினார்.


இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெறும் பெண் கவிஞர்


இலக்கியத்துறையில் அமெரிக் காவைச் சேர்ந்த கவிஞ ரான லூயிஸ் க்ளுக் கிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


2020ஆம் ஆண்டில் நோபல் பரிசு பெறும் 4ஆவது பெண் லூயிஸ் என்பது குறிப்பிடத்தக்கது. 1943 ஆம் ஆண்டு நியூயார்க்கில் பிறந்த லூயிஸ் தற்போது கேம்பிரிட்ஜில் வாழ்ந்து வருகிறார். கவிஞர் என்பதை கடந்து நியூஹேவனில் உள்ள யேல் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்துறை பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.  1968 ஆம் ஆண்டு ஃபர்ஸ்ட் பார்ன் (First Born) என்ற புத்தகத்தின் மூலம் இலக்கிய உலகில் அறிமுகமான லூயிஸ்,விரைவில் சமகால அமெரிக்க இலக்கியவாதி களில் முக்கியமான வராக உயர்ந்தார்.


இவர் எழுதிய கவிதை களும், கட்டுரைகளும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன.  1992ஆம் ஆண்டில் இவர் எழுதிய தி வைல்ட் அய்ரிஸ் என்ற புத்தகத்தில் இவரது வர் ணனை அனைவரையும் ஈர்த்தது. இலக்கியத்திற்கான விருது அறிவிக் கப்பட்டுள்ள நிலையில், வெள்ளிக் கிழமை அமைதிக்கான நோபல் பரிசும். சனிக்கிழமை பொரு ளாதாரத்திற்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட உள்ளன.


No comments:

Post a Comment