‘சமஸ்கிருத இலக்கிய மேன்மை’ எப்படிப்பட்டது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 10, 2020

‘சமஸ்கிருத இலக்கிய மேன்மை’ எப்படிப்பட்டது

‘சமஸ்கிருத இலக்கிய மேன்மை’ எப்படிப்பட்டது?


- இதோ ஓர் ஆதாரம்!


தம் இனத்தைக் காட்டிக் கொடுத்து, பிரபலமான புகழ் மாலை பெற்றவர்களில் கம்பரோடு போட்டியிடு கிறார் வடமொழி கவி காளிதாஸ்!


இராமன் புகழ்பாட ‘இராமாவதாரம்‘ கம்ப இராமா யணத்தை எழுதிய கம்பன் என்ற ஆரியக் கூலி, இரா மனின் இராஜ்ஜியத்தில் எப்படி ‘சூத்திர’ சம்பூகன் தவம் செய்ததால், தன் மகன் - தர்மம் அழிந்ததால் - ‘‘பிராமணச் சிறுவன்’’ இறந்தான் எனக் கூறி, புகார் கூறியவுடன் புறப்பட்டு, தவஞ்செய்த சூத்திரனைக் கண்டந்துண்டமாக வெட்டினான் இராமன் என்ப தைக் கூறும் உத்தரகாண்டத்தையே எழுதாமல் விட்டுவிட்டான், கம்பன் தனக்கு மாசு எய்தும் என்பதால்.


ஆனால், கவி காளிதாசனோ ‘‘இக்காலத்தில் பல பிரதிகள் சூத்திரருக்குத் துறவு வாழ்க்கையை மறுக் கின்றன. சூத்திரத் துறவி சம்பூகனை இராமாயணம் கண்டிப்பதை காளிதாசர் வேண்டுமென்றே மீளவும் கூறுகிறார். அவரது கருத்தில் சம்பூகன் துறவின் வழியே தகுதியைப் பெறுவதன் மூலம் நிலை நிறுத் தப்பட்டுள்ள ஓர் ஒழுங்கின் பாதுகாப்பை அச்சுறுத் துகிறான். ராமனால் சம்பூகனுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டுமென்று பரிந்துரைக்கிறார்; மேலும்  அவர், இதன் விளைவாக ஒரு சூத்திரன் நல்லொழுக்க நிலையை அடைந்தாலும், அவனது கடுமையான சேவையின்மூலமாகக் கூட அதை அவன் பாதுகாத்துக் கொள்ள இயலாது. ஏனெனில், இவனது வகுப்புக்குரிய சட்டங்களை மீறிச் செய்யப்படுவதாகும்.’’


‘ரகுவம்சம்‘ - XV 53, அனு.பர்வ SE  270-11


‘பண்டைய இந்தியாவில் சூத்திரர்கள்’


நூலின் பக்கம்-312


(ராம் சரண் சர்மா எழுதியது இந்நூல்)


No comments:

Post a Comment